பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

9. தமிழ்க் காவிரி சீத்தலைச் சாத்தனார், தம் மணி மேகலை காப்பி யத்தின் பதிகப் பகுதியில், காவிரியைத் தமிழ்ப் பாவை’ எனத் தமிழ்ப் பெண்ணாகவே கூறிவிட்டார். பல முறை பாவை எனக் குறிப்பிட்டுள்ளார். சில பதிகப் பகுதிகள் வருமாறு: 'கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான்நிலை திரியாத் தண் தமிழ்ப் பாவை’-24,25 "கரகம் கவிழ்ந்த காவிரிப் பாவை’-பதிகம் ட 12 "ஓங்குநீர்ப் பாவை’ - பதிகம் 6 'தவா நீர்க் காவிரிப்பாவை’ 06ಗಿ-3-55 சிலப்பதிகாரத்திலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “பரப்பு நீர்க் காவிரிப் பாவை’’ சிலம்பு-நாடுகான் காதை-48 பாரதிதாசனாரின் பங்கு இதில் மிகப் பெரியதாகும். த-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/55&oldid=1018951" இலிருந்து மீள்விக்கப்பட்டது