பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74. கிருஷ்ண ராச சாகரம் என்னும் கண்ணம்பாடி நீர்த் தேக்கத்திற்கு அருகே காவிரியின் வட கரையில் திப்பூர், என்னும் இடத்தில் ஹேமாவதி என்னும் ஆறு கலக் கிறது. நீர்த்தேக்கத்தின் இட்ையில் காவிரியின் தென் கரையில் பைரபூர் என்னும் இடத்தில் இலட்சுமண தீர்த்தம் என்னும் சிற்றாறு கலக்கிறது. கண்ணம்பாடி நீர்த் தேக்கத்திற்கும் சிவ சமுத்திரத் திற்கும் இடையே காவிரியின் வடகரையில் லோக பாவணி சிம்சா என்னும் ஆறுகள் கலக்கின்றன. தென் கரையில் சில சிற்றாறுகளுடன் கூடிய கபினி என்னும் ஆறும் சுவர்ணாவதி” என்னும் ஆறும் கலக்கின்றன. தமிழ் நாட்டு எல்லைக்கு அருகில், அர்க்காவதி என்னும் இடத்தில் "அர்க்காவதி என்னும் ஆறு காவிரி யில் கலக்கிறது. காவிரி கருநாடகத்தை விட்டுத் தமிழ் நாட்டில் புகுவதற்குமுன், கருநாடக எல்லையில் கடைசி யாகக் கலக்கும் ஆறு இந்த அர்ச்காவதிதான். - பல சிற்றாறுகள் சேர்ந்த தொட்டஹள்ளி' என். "னும் ஆறு, மேகதாட்டு என்னும் இடத்திற்கும் 'ஹொகென்கல் என்னும் இடத்திற்கும் இடையில் கலக் கிறது. . . . - . . . . ஹொகெனக்ல் நீர் வீழ்ச்சிக்கு அருகில் சின்னாறு. என்னும் ஆறு கலக்கிறது. இதற்குச் சனத் குமார ந்தி: என்ற வேறு பெயரும் உண்டு. . தொப்பூரில் தோன்றும் தொப்பையாறு பெரும் பாலை என்னும் ஆற்றையும் தன்னுட்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/76&oldid=1018999" இலிருந்து மீள்விக்கப்பட்டது