பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

94 காவிரியைக் குடகக் காவிரி (250) எனவும், ' குடதிசை வாராழி போலும் படர்நதி காவிரி (904) எனவும் திருப்புகழ் கூறுகிறது. மேற்கிலிருந்து கடல்: போல் பெருக்கெடுத்துக் காவிரி வருகிறதாம். 'குடகில் பிறந்து குளிர்கன் னடத்தில் அடைவே வளர்ந்து பின் அரியசோ ணாட்டில் வாழ்க்கைப் பட்டு வளமது பெருக்கி ...இயங்கும் காவிரி' அம்பிகாபதி காதல் காப்பியம்-நாடு நகர் நலங்கூறு காதை-90-93 காவிரி பிறந்த இடம் குடகு நாடாம்; வளர்ந்த இடம் கன்னட நாடாம்; வாழ்க்கைப்பட்டுப் பெரு, வாழ்வு வாழ்ந்த இடம் சோழ நாடாம். இந்த இலக்கியச் சான்றுகளால், காவிரியாறு யார் யார்க்கெல்லாம் உரியது என்பது புலப்படும். மிகப் பரந்த ஓரிடத்தைக் குறிப்பதற்குக் கடலும் காவேரியுமா யிருக்கிறது’ என்று சொல்வது மரபு. முன்னொரு காலத்தில், கடல் கரையைக் குத்தி நெரித்துக் கரைத்த காவிரி, சேக்கிழார் காலத்தில் “கடல் வயிறு நிறையாத காவிரி’யாயிற்று. அதாவது, பல கிளை ஆறுகளாகவும் கிளை வாய்க்கால்களாகவும் பிரிந்து வழியிலேயே தண்ணிரை வாரி வழங்கியதால், கடற்கரைப் பக்கம் நெருங்கும்போது சிறு கால்வாய் போல் ஆடு தாண்டும் காவிரியாய் விட்டது. - கல்லும் காவிரியும் உள்ள மட்டும் வாழ்க’ என்பது ஒரு பழமொழி. இந்தப் பழமொழி பொய்க்காமல் என்றென்றும் காவிரியில் நீர் நிறைந்து வர ஆவன செய்ய வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/96&oldid=1019026" இலிருந்து மீள்விக்கப்பட்டது