பக்கம்:தமிழ்க் காதல்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

103


இழந்தன்று தன்வீழ்வுரு பொருளே’ (அகம். 189). இவ்வாறு தன் கவலையினும் ஊர்க்கவலை பெரிதாயிற்று எனத் தாய் புலம்புகின்றாள். இதனால் ஊரலர் அன்புவழிப்பட்டது என்பது பெறப்படும். - தமிழ்ச் சமுதாயம் களவுமுறையை ஒருநெறியாகக் கண்டு ஒம்பியது என்ற கருத்து இன்னும் வலியுறக் காண்போம். உடன்போய காதலர்கள் இடைச்சுரத்து வெயிலுக்கு ஆற்றாது மராமரத்தின் நிழலில் தங்கினர்; நீர் விடாய்க்கு நெல்லிக்கனிகளைத் தின்று கொண்டிருந்தனர். இவர்கள் எந்நாட்டினரோ, எவ்வூரினரோ, எவர்மக்களோ? யாராயினும் அருளுக்கும் ஆதரவுக்கும் உரியவர்கள். ஏன்? இணைபிரியா மகன்றிற் பறவை போல என்றும் நீங்காது உடனிருக்கும் காதற் கொள்கையுடையவர்கள்; யார்கொல் அளியர் தாமே வார்சிறைக் குறுங்கால் மகன்றில் அன்ன - உடன்புணர் கொள்கைக் காத லோரே (ஐங். 38) என்று இவ்விருவரையும் கண்ட வழிப்போக்கினர் பாராட்டு வாராயினர். உடன்புணர் கொள்கைக் காதலோர்’ என்ற தொடரால், கற்புக்கடன் பூண்ட இவ்வுடன்போக்கு வழிப்போகுநர்க்கும் உடன்பாடே என்பது பெறப்படும். உடன் போய மகளைத் தேடிச்சென்றாள் ஒரு செவிலித்தாய். 'தன் மகளையும் அவள் காதலனையும் கண்டதுண்டோ’ என்று எதிர்ப்பட்ட முக்கோற் பகவரைத் துடிதுடித்து வினவினாள். தமிழியல் அறிந்த அந்த ணாளர்கள், கண்டோம் கண்டோம். கற்புவழிப்பட்டாளைச் சுரத்திடைக் கண்டோம். அவள் சென்ற நெறியே தலையாய அறநெறி. வாழ்வுக்குச் சிறந்தான்ை வழிப்பட்டுச் சென்ற கற்பியின் பொருட்டு, தாயே, கவலற்க’ என்று அறமும் அமைதியும் தோன்ற ஏதுக் காட்டினர் (கலி, 6). உடன் புணரிகளை வழியிடைக் கண்டார் யாரும். 'இவ்வகைப் போக்குத் தவறு, பெற்றோர் அறியா இச்செலவு பழியுடையது' என மறித்து நிறுத்தியதாக ஒரு பாடற் குறிப்பும் இல்லை. இக் காதற் செலவை வரவேற்ற பாடல்களே உள. இதனால் நன்மைக் காதலர்கள் மறைவொழுக்கத்திற் பெற்ற பொது அன்பும் அளியும் சமுதாய இசைவும் தெரிய வரும். - குடும்ப இசைவு மறைவுச் செய்தியைக் கேட்டதும், தடம் பிறழ்ந்தாற் போலத் துடிக்கும் சிலர் உண்டு. அவர் தலைமகளின் குடும்பத்தாராவர். பெற்றோர்கள் களவு நெறியை உடன் படாது கதப்பட்டார்கள் என்று கொள்ளக் கூடாது. அன்னோர் சினப்பு களவு நெறி 1. ஒநோ. அகநானூற்றுச் சொற்பொழிவுகள். ப.12.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/117&oldid=1238406" இலிருந்து மீள்விக்கப்பட்டது