பக்கம்:தமிழ்க் காதல்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

தமிழ்க் காதல்


பெண்டுகள் என்று முன்னரே விளக்கியுள்ளேன். அம் முயற்சியைச் சிலப்பதிகாரப் பாடல்களும் புலப்படுத்துகின்றன. வேலன் வந்து வெறியாடும் களத்து மயில்மேல் முருகன் வருவான்; வந்தால், மலைநாடனது திருமணத்தை வேண்டுவோம் (குன்ற, 15). (வேறு மணத்தை வேண்டோம் என்பது குறிப்பு), அயல் மணம் ஒழி, அவர் மணத்தை அருளெனத் தொழுவோம் (குன்ற.16); அவர் பலரறிமணம் செய்து கொள்வார் எனக் கூப்புவோம் (குன்ற. 17), இங்ங்னமாகத் தோழியும் தலைவியும் அயல்மண வொழிவையும் அவர் மணவுறுதியையும் சுட்டி மொழிந்து வருகாலை, நன்மணம் பெறுக, பிழைமணம் விடுக (குன்ற, 18) என்று கூறிமுடிப்பர். ஆதலின் பிழைமணம் என்பது நொதுமலர் வரைவை தலைவன் அல்லாத பிறனுக்கு மணம்பேசுவதைக் குறிப்பதாகும். பிறர் மணமே கற்புக்குக் கேடு பயக்கும் தவறான மணமாகும் அறங் கடந்த மணமாகும். ஆதலினன்றே அறத்தொடு நிற்றல் வேண்டுவதாயிற்று. களவு கற்பு என்பன சமுதாயநிலை நோக்கிய சொற்கள். சமுதாயத்திற்கு மறைவு களவு எனவும், வெளிப்படை கற்பு எனவும் படும். உள்ளம் ஒன்றிய காதலர்தம் அன்புநிலை நோக்கின், களவும் கற்பேயாம். சமுதாய ஒழுங்குக்கு உட்படுவான் தூயகாதலாளர்கள் மணநிலை கொள்வர். அஃதன்றித் திருமணத்தால் உள்ளம் ஒன்றும் என்றோ, காதல் தூய்மை பெறும் என்றோ அகத்திணைக்கண் பொருள்கொள்ளல் ஆகாது. காதலர்கள் எஞ்ஞான்றும் கற்புடையவர்கள், அன்பினர் என்பது அகத்திணைக் கோளாகும். 'இது தீமை பயக்கும் களவன்மை கொள்க’ என்பர் இளம்பூரணர் (தொல். பொருள், 487), இளையோள் வழுவிலள் என்பது ஒருதாய் மொழி (நற். 143) கரதனி இனிய தாகுக தில்ல அறநெறி இதுவெனத் தெளிந்தவென் பிறைநுதற் குறுமகள் போகிய கரனே (ஐங், 371) களவொழுகி உடன்போகிய தன்மகள் அறநெறி தெளிந்தவள் என்று தாய் தெளியக் காண்கின்றோம். ஆதலின், அகத்தினை கூறும் களவு அறநெறிப் பட்டது என்று துணிவோமாக பிழை மணம் - அயலார் மணம் என்பது நாட்டாரின் நல்லுரை, அறஞ்சாலும் அகத்திணைக் களவு புலவர்தம் படைப்பன்று:தமிழ்ச் சமுதாயத்தில் பரவிக் கிடந்த ஒழுக்கமாகும். மக்கள் வாழ்க்கையில் ஊறிக்கலந்த இன்பக் களவுணர்ச்சியை அகத்திணைப் படைப்பிற்கு நற்கூறாகப் புலவர்கள் தழிஇக் கொண்டனர். 1. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, ப7. திருவள்ளுவர் நூல்நயம் ப. 73.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/120&oldid=1238409" இலிருந்து மீள்விக்கப்பட்டது