பக்கம்:தமிழ்க் காதல்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

111



நன்றா கின்றால் தோழிநம் வள்ளையுள்
ஒன்றிநாம் பாட மறைநின்று கேட்டருளி
மென்றோட் கிழவனும் வந்தனன் நுந்தையும்
மன்றல் வேங்கைக் கீழிருந்து
மணநயந் தனன்.அம் மலைகிழ வோற்கே (கவி. 41)

இது களவு வெளிப்படா முன்னரே, பெற்றோர் மூலம் நடத்திக் கொண்ட திருமணமாகும். தோழியும் தலைவியும் பாடிய வள்ளைப் பாட்டு ஒளிந்து நின்ற தலைவன் நெஞ்சைத் தாக்கியது. இனி, களவு நீளாது வரைதலே தகும் என்று மணம்பேச வந்தான். வந்தவனுக்குத் தன் மகளோடு உறவுண்டு என்று தந்தை அறியான். அறியாத நிலையிலே, தலைவனது.விருப்பத்திற்கு இசைந்தான். எதிர்பாரா இந் நல்லிசைவு, காவல் நிலையத்து எழுதி வையா முன்னரே இழந்த பொருள் கிடைத்தாற் போன்ற மகிழ்ச்சியைத் தோழிக்கு அளித்தது. ‘தோட் கிழவனும் வந்தனன், நுந்தையும் நயந்தனன்’ என்ற அணுகிய சொன்னடையால், களவு புலப்படவில்லை என்பது அறியலாம். இம் மணமுடிவு படாமை வரைதல்’ என்பதற்கு இலக்கியமாம். எந்தையும் யாயும் உணரக் காட்டி ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின் மலைகெழு வெற்பன் தலைவந் திரப்ப நன்றுபுரி கொள்கையின் ஒன்றா கின்றே (குறுந் 374) இது பெற்றோர்க்குக் களவை வெளிப்படுத்தி முடித்துக் கொண்ட திருமணமாம். களவொழுக்கத்தை "ஒளித்த செய்தி” என்றும், தலைவன் கேட்க வரைவுக்குப் பெற்றோர் உடன்பட்டதை நன்று புரி கொள்கை என்றும் பல்காயனார் பாடுவர். இனி, நேர்வழியல்லது குறிப்புவழி பயன்படாது என்ற நிலையில், காதற் கன்னியர் துணிவு தலைக்கொண்டு, வெளிப்படு சொல்லால் களவைப் பெற்றோர் முன்னும் அறிவிப்பர் எனவும், உறுதியும் உண்மையும் தெரிந்த அறிவுடைப் பெற்றோர் கற்புக்கு ஆவனவே செய்வர் எனவும், இவ்வாற்றால் தமிழ்ச் சமுதாயம் முடிவில் கற்புக்குச்செவிசாய்த்துத் தலைவணங்கிற்று எனவும், இக் குறுந்தொகைப் பாட்டால் செவ்விதின் விளங்கும். a . . . கற்புக்குப் பின்னிடல் யாண்டும் தமிழொழுக்கம் அன்று. இதுவே அகத்திணை கற்பிக்கும் பெருந்தமிழ்மை என அறிக. உடன்போய மகள் களவுக் காதலனோடு ஊர்வந்து தன் வீட்டில் வழக்கம்போல் மணஞ்செய்து கொள்ளவேண்டும் என்ற மரபுப்பற்று' பெண் வீட்டார்க்கு இருந்தது."எம்மனை வதுவ்ை நன்மணம் கழிக’ (ஐங். 34),"ஆனாது துயரும் என் கண் இனிது படீஇயர் எம்மனை முந்துறத் தருமோ” (அகம்.195) என்று, இங்ங்ன் உடன்ப்ோகியாளின் அன்னை பேராசைப் படுகின்றாள். . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/125&oldid=1238421" இலிருந்து மீள்விக்கப்பட்டது