பக்கம்:தமிழ்க் காதல்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

தமிழ்க் காதல்


தந்தை வழியாலோ தொடர்பில்லா எட்டாக்கை யிடத்தும் மணம்பேசி முடிப்பர். "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற நிலையை இக் கொள்வனை கொடுப்பனைகளிற் பார்க்கின்றோம். இத்தகைய ஒரு மணவரைவைப் புலவர் செம்புலப் பெயல் நீரார் அருமையாகப் பாடுகின்றார். - யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சந் தாங்கலத் தனவே (குறுந்:40) இது பெற்றோர் முடித்திட்ட திருமணக் காதலன் புணர்ச்சியில் மகிழ்ந்து கூறும் கட்டுரையாகும். நம்முள் முன்னுறவில்லை, நம் தகப்பர்க்கும் முன் அறிமுகம் இல்லை. நம் தாயரும் தெரிந்தவர்கள் இல்லை, யாதும் உறவில்லா நாம், மண்ணக நிலனும் வானக நீரும் கலந்து ஒன்றானாற் போல, அன்பினால் உள்ளங் கலந்துவிட்டோம் என்று உடல் மயங்கிய கணவன் புதுதட்பின் ஆழத்தை அறிவுறுத்து கின்றான். இப்பாடலுக்குக் குறுந்தொகையில் வகுக்கப் பட்டுள்ள துறை வேறு. இயற்கைப் புணர்ச்சி எய்திய தலைவன் நமக்குள் பிரிவு ஏது என்று சொல்லித் தலைமகளை ஆறுதல் செய்தான் என்பது அத்துறை. இக்களவுத் துறையும் பொருந்துமெனினும், குரவர் கூட்டிய கற்பின் முதற் புணர்ச்சியாகக் கொள்ளுதல் இன்னும் சாலும் என்பது என் கருத்து. இருவகைக் குரவரையும் நினைகின்றான், நினைப்பிக்கின்றான்.ஆதலின், குரவரிற் புணர்ச்சியாகக் கொள்க. குறிஞ்சித் திணைக் களவுத்துறைப் பாடலில் முதற்பொருள் கருப்பொருள் பெரிதும் இடம் பெறுதல் உண்டு. புணர்ச்சி கூறும் இக் குறுந்தொகைப் பாடலில் முதலும் கருவும் இடம் பெற்றில; மலையோ பிறவோ கூறப்பெற்றில ஆதலின், இல்லத்து நிகழ்ந்த கற்புப் புணர்ச்சியாகவே கொள்க. - . . . . களவின் வழிவாராக் காதலர்தம் இன்பநிலை அக நானுற்றப் பாட்டாலும் (136), அன்புநிலை குறுந்தொகைப் பாட்டாலும் (40) தெளியவரும். எந்நிலையிலும் இவர்க்கும் களவின் வழிவந்த காதலர்க்கும் அகத்தினை வேறுபாடு காட்டவில்லை. அன்புடைப் பெற்றோர் தம்மக்கள் நல்வாழ்வு வாழவேண்டும் என்றே எண்ணுவர். அறிவும் உடைய பெற்றோர் அன்னவர்தம் நோக்கத்தைக் குறிப்பால் அறிந்தே மணமுடிவு செய்குவர். ஆதலின் பெற்றோர் முடிபெல்லாம் பிள்ளைகள் காதல் நாட்டத்திற்கு மாறாக இருக்கும் என்று சொல்லுதற்கில்லை. ஒத்திருப்பனவே பெரும்பாலன. கற்புவழிப் பட்டிகளவுகளே அகத்திணையில் இடம்பெறகின்றன. அதுபோல் அகத்திணையில் பிள்ளைகள் ஒத்துக்கொள்ளும் பெற்றோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/128&oldid=1238425" இலிருந்து மீள்விக்கப்பட்டது