பக்கம்:தமிழ்க் காதல்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

115


மணமுடிபுகளே இடம் பெறுகின்றன. ஆதலின் புலவர்கள் வேறுபடப் பாடுதற்கு விதியில்லை. களவுநெறியாகுக - மரபு நெறியாகுக, எந்நெறிக் கண் காதலர்களிடை உள்ளப்புணர்ச்சி - ஒருமை நெஞ்சம் உண்டு. அந்நெறியெல்லாம் ஐந்திணைப்பாற்படும் என்று அறிவோமாக. எவ்வழித் திருமணத்தராயினும், உள்ளம் ஒன்றிய காதல் மாந்தர் அவ்வொருமைகெட யாதும் செய்யார். இவ்வொருமை கெடாதவாறு யாதுஞ் செய்வர். காதலுக்கு ஒருமை இலக்கணம் கூறும் இத்தமிழியம் மனிதவினத்திற்கே பொதுமை, உண்மைக் காதலர் உறவுக் கிடையே திண்மை குலைக்கும் தீமைகள் தோன்றா ஏதுக் கண்டால் மாறிக் கொள்ளும் காதல் தானும் காத லாமோ பிளவுபடுதற்குரிய காரணம் இருப்பினும், பிரியா ஒருமை வாழ்வே காதல் என்று உலகப்புலவர் செகப்பிரியர் இல்லறத்தின் ஆழத்தை அளந்து காட்டுவர்: . பிற்சங்க காலத்தெழுந்த தமிழ் முதற்காப்பியமாம் சிலப்பதி காரம் கோவலன் கண்ணகியர் திருமணத்தை ஒருகாதை முழுதும் விரித்துப் பாடுகின்றது. யாதொரு களவுச்சுவடும் ஆண்டு இல்லை. இது குரவர் முடித்த மணம் என்று இளங்கோ வெளிப்படையாகக் கூறுவா. அவரை, இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால் மனவணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி யானை யெருத்தத் தணியிழையார் மேலிரீஇ மாநகர்க் ந்ேதார் மணம் . × குரவர் முடிவைக் குழந்தைகள் மறுக்கவில்லை.மணம் மணமாக நடந்தது. ஆராக் காதலில் இருவரும் கையற்றனர் என்று மனையறம்படுத்த காதை முழுதும் படிக்கின்றோம். பாம்பின் புணர்ச்சிபோலத் தொலையாத இன்பமெலாம் துன்னினார் என்பது வெண்பா. கோவலன் கண்ணகியர்தம் உடம்படு புணர்ச்சி கூறுமுகத்தால், 'உள்ளம் புணர்ந்திருந்த நிலையை இளங்கோ காணச்செய்வர். இக்காதைக் கண்ணும் களவுக் குறிப்பில்லை என்பதும் நினையத்தகும். காதலாயின் களவு செய்யும் என்றும், களவொழுக்கத்தாரே காதலர் எனச் சொல்லுதற்கு உரியார் என்றும் கருதலாமோ எனின், அது பிழை. காதல் என்பது உள்ளப்புணர்ச்சி; 1. “Let me not to the marriage of the true minds , Admit impediments. Love is not love < Which alters when it alteration finds” -- Sonnet Cxv

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/129&oldid=1238426" இலிருந்து மீள்விக்கப்பட்டது