பக்கம்:தமிழ்க் காதல்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

தமிழ்க் காதல்


உள்ளப் புணரிகளெல்லாம் காதலர்களே. ஆதலின், "காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்” (1, 16 'களமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும்” “தீராக் காதலின் திருமுகம் நோக்கி” (2, 36) "காதலி தன்னொடு கதிர் செல்வதன்முன்” (15,1)"காதலன் தன் விவும் காதலி நீ பட்டது உம்” (29, 7) என்றாங்கு சிலப்பதிகாரத்தில் கோவலனும் கண்ணகியும் காதற் சொற்களால் பாடப் பட்டனர். கற்புக்குக் காப்பியம் அருளிய கண்ணகி நல்லாளை விடக் காட்டாவாள் யார்கொல்? அவள் மணம் மரபு நெறிப்பட்டது ஆதலின் அந்நெறிக்குக் குறை என்ன சொல்ல முடியும்? ஆர்வப் பிணைப்பு (களவியல்) அறவே இல்லாவிடத்தும் பிறநெறியான் வந்த மணங்கள் நிலைப்புடையனவாக உள என்பர் கென்னத்து வாக்கர்! “களவின்வழி நிகழாதேயும் உண்டு உலகக் கற்பு: அஃது இத்துணைச் சிறப்பின்று” என எழுதுகிறார் இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் (பக். 124). உலகக் கற்பு’ என்று இவர் குறிப்பது மரபுவழி மணத்தை. இலக்கியப் படைப்பிற்குத் துறைபல உடைய களவு நெறியில் வாய்ப்பிருப்பது போல மரபுநெறியில் இல்லை, ஆதலின் உலகக் கற்புச் சிறவாது என்பது உரையாசிரியர் கருத்தாயின், (அவர் அங்ங்னம் கருதவில்லை) அஃது ஒக்குமன். இலக்கியம் நோக்கிக் கூறாது வாழ்க்கைச் சிறப்புநோக்கிக் கூறினாராயின், கற்புக்கடம் பூண்ட தெய்வக் கண்ணகியின் மணமே தன் மறுப்பாகும். மேலும் அகத்திணையில் உலகக் கற்பிற்கு இடமில்லை என்று இவர் கருதுவது, "உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்” (தொல், 998) என்னும் அகக்கருத்திற்குப் பெருமுரணாம். அகத்திணை ஆகாயத்திற் பூத்த கற்பனை யிலக்கியமன்று நல்ல தமிழ்ச் சமுதாயம் தந்த வழக்கிலக்கியம் என்று அறியவேண்டும். இறையனாரகப் பொருள் உரையாசிரியரும், அவ்வாசிரியர் அனைய பிறரும் நம் சமுதாய வழக்கை மறந்தும் துறந்தும் எழுதும் போதெல்லாம் பிழை எழக் காண்கின்றோம். களவுநெறி. ஒன்றுதான் திருமணத்துக்கு நெறியாக இருந்தது என்று துணிதற்கோ, அந்நெறிதான் சிறப்பிடம் பெற்றிருந்தது என்று துணிதற்கோ இலக்கியத்தும் சான்றில்லை. தமிழ்ச் சமுதாய வழக்கும் சான்றாமாறில்லை. குரவர் தாமே முடிக்கும் மரபுநெறி என ஒன்று இருந்தது.இயல்பாகச் சமுதாயத்துப் பரவிக்கிடந்தது, இலக்கியத்தும் கற்புத்திணையில் களவுபோல் பாடப்பெற்றது என்ற நிலைகளை இதுகாறும் கண்டோம் மண்நிலை ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பெரு நிலையாகும். புதிய சமுதாய இனங்களில் மணநெறிகள் ஒழுங்கு படுவதில்லை. அவ் வினத்தார்க்கும் இதுதான் மணமுறையென ஏற்க மனம் பக்குவப்படுவதில்லை. தமிழ்ச் சமுதாயம் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னே பயின்று பரந்து ஓங்கித் தமிழ்மொழி போல் 1. The Physiology of Sex: p. 99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/130&oldid=1238427" இலிருந்து மீள்விக்கப்பட்டது