பக்கம்:தமிழ்க் காதல்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

தமிழ்க் காதல்


ஒருவனை நினைத்த உள்ளக்காப்பின் பொருட்டு, ஆதலின் கற்பு என்னும் சொல் - ஒழுக்கத்திண்மை என்னும் வழக்கப் பொருண்மை உடைய அச்சொல் - களவுப் பாடல்களிலும் பயிலக் கற்கின்றோம். அஞ்சிலம் பொடுக்கி அஞ்சினள் வந்து துஞ்சூர் யாமத்தும் முயங்கினள் பெயர்வோள் ஆன்ற கற்பிற் சான்ற பெரிய அம்மா அரிவையோ அல்லள் (அகம். 168) இறந்த கற்பினாட் கெவ்வம் படரன்மின் சிறந்தானை வழிபடீஇச் சென்றனள் (கலி. 9) இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக் கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்களுர் எய்திக் கற்பொடு புணர்ந்த கெளவை (தொல். 86) 1. பெற்றோரைக்கரந்து. காற்சிலம்பின் நாவைக்கட்டி, நள்ளென் யாமத்து வந்து ஆரத்தழுவிய தலைவியை, ஆன்ற கற்பிற்சான்ற பெருமையுடையவள் என்று தலைவன் அவள் கற்பின் ஆற்றலை உணர்கின்றான்.2.மகள் உடன்போயினாள் என்று அலைந்து திரியும் செவிலிக்கு முக்கோற் பகவர்கள், அன்ன கற்புத்திண்ணியள் நின்மகள்காண் என்று உணர்த்துகின்றனர். 3 தன்னை மீட்பதற்குச் சுரத்தளவும் ஓடிவந்த வீரச்சுற்றத்தைக் கண்டபோது, அவ்வரவைப் பொருட்படுத்தாது, தலைவனைப்பற்றி நின்று கற்புத் திண்மையை வெளிப்படுத்துவாள் எனவும், வெறுங்கையோடு சுற்றத்தார் மீள்தலின் அவள் கற்பை ஊர் அறியும் எனவும் தொல்காப்பியர் களவுக்கற்பை அறிவுறுத்துவர். ஆதலின் ஒழுக்கக்கற்பு எஞ்ஞான்றும் உளது.அதனை ஈண்டுப் பேசாது, திருமண வாழ்க்கை என்னும் கற்புக் கைகோள்பற்றி ஆராய்வோம். கற்பு முறைகள் தமிழ்ச் சமுதாயத்தில் திருமணக் கற்பு முறைகள் வந்த வரலாற்றை ஆராயின், சில மறைவுக் கூறுகள் புலனாகும். சமுதாயத்தின் குறிக்கோளும், அதன் செயல்வழியும், வழி இதுவெனக் காட்டிய அறிவுக் கூர்வும் விளங்கும். சமுதாயம் மரபுப் பற்றுடையது, மரபினைப் புதுக்கிக் கொள்ளும் வழியறிவும் உடையது என்பதெல்லாம் தெளிவுபடும். கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் . கொடுப்பக்கொள் வதுவே (தொல். 1087) கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான (தொல். 1088)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/136&oldid=1238440" இலிருந்து மீள்விக்கப்பட்டது