பக்கம்:தமிழ்க் காதல்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

125


காதலர்க்கும், களவின் வழி வாராக் காதலர்க்கும், அஃதாவது திருமணம் புகும் எல்லார்க்கும் செய்யப்படுவது. அது திருமணக் காலத்துச் செய்யும் சடங்கு. பொய்யும் வழுவும் இல்லாத ஆண் பெண்கட்கே திருமணத்தன்று சடங்கு நிகழ்கின்றது என்பதை நினைத்துக்கொள்க. உலகத்து காதற் பிழைபாடுகள் பல இருந்தாலும், தமிழ் அகத்திணையும் அகவிலக்கியங்களும் அன்பிற் கூடிய காதலர்களையே எடுத்துக்கொள்கின்றன, தொடுக்கின்றன என்பதனையும் நினைக. “அன்போடு புணர்ந்த ஐந்திணை' (1037), “ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும்” (1038) எனத் தொல்காப்பியர் அகத்திணைக் காதலர்களின் அன்புக் கிடக்கையைப் புலப்படுத்துவர். ஐந்திணைக் காதற் பொருளின் அறிவுடை அமைப்பினை அடுத்துவரும் இயலில் விளங்கக் காணலாம். c: : - - . vIII கரன ಎyಖ॥ [Di திருமணத்தன்று கரணம் நிகழும் என்று சொல்லும் போது, கரணம் ஆணுக்கும உண்டு. பெண்ணுக்கும் உண்டு என்பதுபோற் படினும், மெய்யாக நோக்கின், கரணத்துக்கு உரியாள் பெண்ணே என்று கொள்ளவேண்டும். தமிழ்ச் சமுதாய வழக்கும் இலக்கிய வழக்கும் காட்டும் நெறியிது.இன்று பெரும்பாங்கு காணத்தகும் மரபு இது திருமண நாளன்று பெண்ணுக்குக் கரணம் ஏன்? பெற்றோர் தம் மகளை மணஞ்செய்து கொடுத்திட்டார்கள் என்று கொள்வோம். அவள் மனைவியானாள் என்பது திருமணத்தைக் கண்டார்க்கும் கேட்டார்க்குமே தெரியவரும். பலர் அறிதற்கு இடனில்லை. அணிமையில் மணம் கொண்ட ஒரு பெண்ணுக்கும், மணப்பக்குவம் கொண்ட ஒரு பெண்ணுக்கும் என்ன புற வேறுபாடு உண்டு களவு நெறியைப் போற்றி உடன்பட்டது தமிழ்ச் சமுதாயம். நெருநற்குமரி இன்று மனைவியாவாள். அதற்கு ஒர் மணக்குறி இன்றெனின், நாளை அவள்மேல் ஒரு நல்லிளைஞனுக்கும் இயல்பாகக் காதல் ஒடலாமன்றோ? இவள் ஒருவனுக்கு உரியவளாயினாள், இனியார் எண்ணுதற்கும் உரியாளில்லை என்று சட்டென அறிதற்கு ஏதுவாக ஒரு புறத்தோற்றத்தைச் சமுதாயம் அளிக்குமேல் பிறன்மனை நயந்த பெருங் குற்றத்திற்கு இளைஞர் ஆளாகாரன்றே. - ஏகு நல்வழி யல்வழி யென்மனம் ஆகு மோவதற் காகிய காரணம் பாகு போல்மொழிப் பைந்தொடி கன்னியே .” ஆகும் வேறிதற் கையுற வில்லையே (பால. மிதிலை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/139&oldid=1238444" இலிருந்து மீள்விக்கப்பட்டது