பக்கம்:தமிழ்க் காதல்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

தமிழ்க் காதல்


தொல்காப்பியர் கூறினாரல்லர். அவர் கூறாமைக்குக் காரணம் திணைதோறும் கலந்தோறும் வேறு வேறு கரண அடையாளங்கள் வழங்கியிருக்கலாம். தற்காலத்துக் கரணக் குறியைக் கூறின், இதுதான் குறியென வழிவழி மக்கள் அடிமைப்படுவர். அது வேண்டா, புதிய கரணக் குறிகள் காலத்திற் கேற்பக் கொள்ளினும் தவறில்லை என்று ஆசிரியர் கருதியிருக்கலாம். கரணம் இதுவெனக் கூறாது, கரணம் வேண்டும் என்று சமுதாய இலக்கணத்தை மட்டும் வலியுறுத்துவர் தொல்காப்பியர் சங்கப் பனுவல்களைக் கொண்டு பண்டு நிலவிய கரணக்குறிகளை நாம் உய்த்துணர முடியும். பெண் குழந்தைகள் குழவிமைதொட்டே காலிற் சிலம்பு அணியும் வழக்கம் முன்பு இயல்பாக இருந்தது என்று பல பாடற் குறிப்புக்கள் கட்டுகின்றன. சீர்கெழு வியனாகர்ச் சிலம்புநக இயலி ஒரை யாயமொடு பந்துசிறி தெறியினும், வாரா யோவென் றேத்திப் பேரிலைப் பகன்றை வான்மலர் பணிநிறைந் ததுபோல் பால்பெய் வள்ளம் சால்கை பற்றி என்பா டுண்டனை யாயின் ஒருகால் துந்தை பாடும் உண்னென் று.ாட்டிப் பிறந்ததற் கொண்டும் சிறத்தவை செய்துயான் நலம்புனைந் தெடுத்தவென் பொலந்தொடிக் குறுமகள் (அகம். 219) “தன் பெரிய வீட்டின்கண் காற்சிலம்பு ஒலிப்பச் சிறு தோழிய ரொடு பந்து விளையாடுவாள். சிறிது ஆடினும், கால் நோவுமே, நா வேட்குமே என்று அழைப்பேன். அழைத்து, கிண்ணம் நிறைந்த பாலை எனக்காக ஒருவாய் உண்டாய், உன் தந்தைக்காகவும் ஒருவாய் குடிப்பாய் என்று சொல்லில் மயக்கிப் பாலூட்டிப் பிறந்த நாள் முதல் வளர்த்தேன்” என இவ்வாறு பருவகாலத்து உடன்போய மகளுக்கு அவள்தன் மழமைக் காலத்துக் காட்டிய அன்பினைத் தாய் எண்ணிப் பார்க்கின்றாள். பாலுண் பருவத்துச் சிலம்பு இடும் வழக்காறு இதனாற் பெறப்படும். தலைவன் தன் புணர்ச்சி வேட்கையை வெளிப்படச் சொல்ல, அவன் விழைவுக்கு இசைந்து, மழை பெய்யும் நடு யாமத்துத் தலைவி இரவுக்களம் வருகின்றாள். செலவு வரவை வீட்டார் தன் சிலம்பின் ஒசையால் அறிந்துவிடலாகாதே என்று அதன் அரவத்தைக் கட்டி ஒடுக்கி வந்து செல்கின்றாள்: 3. அஞ்சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்.(அகம். 198)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/144&oldid=1238442" இலிருந்து மீள்விக்கப்பட்டது