பக்கம்:தமிழ்க் காதல்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

தமிழ்க் காதல்


நீக்குவர். நீக்குங்கால் அது ஒரு விழாவாகக் கொண்டாடப்பட்டுச் சிலம்புகழி நோன்பு எனப் பெயர்பெறும். இந்நோன்பு திருமணத்திற்குச் சிறிது முன்னர்த்தான் நிகழும் என்பதனை “நும்மனைச் சிலம்புகழீஇ அயரினும், எம்மனை வதுவை நன்மனம் கழிக” (ஐங், 399) என்ற நற்றாய் வேட்கையால் அறியலாம். மேலும், சிலம்புகழி விழாவை ஒரிடத்து நிகழ்த்தி, அதன் பின்னர் (கொடுப்பக் கொள்ளல் என்னும்) திருமணத்தை வேறோரிடத்துச் செய்தல் உண்டு என்ற வழக்காற்றையும் அறியலாம். குழந்தை முதலே கிடக்கும் சிலம்பின் நீக்கம் இவள் மனைவியானாள் என்பதனை முழுச் சமுதாயத்திற்கும் காட்டிவிடும். இவள் மனத்தியானாள் என்பதனை அணுகிக் காலிற் சிலம்பில்லாமை கண்டுகூடத் துணியவேண்டும் என்பதில்லை. சிலம்பின் உள்ளிருக்கும் பரலோசை கேளாமை யினால், சேய்மையிலேயே துணிந்துவிட இடமுண்டு. சிலம்பைக் கழித்தல்,இருந்ததை நீக்குதல் என்பது ஒரு காரணமாகவும், அதுவே திருமணத்தின் அறிகுறியாகவும் ஆயிற்று. உள்ளதை ஒழித்தல் அடையாளமாகுமா? ஆகும். இயல்பாக வளரும் தலைமயிரை மழித்தல் துறவுக் கோலமாகவில்லையா? X கூந்தல் மலரணிதல் பண்டை நாளில் வழங்கிய கரணம் ஒன்றே; அதுதானும் சிலம்பின் அகற்சி என்று முடிவு கட்டுதற்கு இல்லை. சிலம்பின்மை ஒர் எதிர்மறை யடையாளம். இவள் மணவாட்டி என்று அறிவிப்பான் பல அடையாளங்கள் திணைக்கேற்ப இருந்திருத்தல் கூடும். அவை இலக்கியம் ஏறாதிருத்தலும் கூடும். சங்கச் செய்யுட்களை நுணுகிக் காண்பார்க்கு மற்றொரு அடையாளமும் வழங்கியமை தெரியவரும். இஃது உடன்பாடான அறிகுறி, பெரிதும் வழக்கில் பரவியிருந்த கரணம். தண்கயத் தமன்ற ஒண்பூங் குவளை அரும்பலைத் தியற்றிய சுரும்பார் கண்ணி பின்னுப் புறந்தாழக் கொன்னே சூட்டி நல்வரல் இளமுலை நோக்கி நெடிதுநினைந்து நில்லாது பெயர்ந்தனன் ஒருவன் அதற்கே. பொன்னேர் நுண்தாது நோக்கி என்னும் நோக்குமிவ் வழுங்கல் ஊரே (அகம். 180) 'குவளைக் கண்ணியை என் பின்னிய கூந்தலில் சும்மா சூட்டினான்; வளரும் மார்பை ஒரு நோக்கு நோக்கிச் சென்று விட்டான், இந்தச் செயலுக்கே ஊர் என்னை ஒருவகையாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/146&oldid=1238452" இலிருந்து மீள்விக்கப்பட்டது