பக்கம்:தமிழ்க் காதல்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

133


அகத்தினைத் தோற்றம் so 133 பார்க்கலாயிற்று. புன்னைத் தாதின் நிறத்தையும் பசலை படர்ந்த என். மேனி நிறத்தையும் உற்று நோக்கிற்று' எனத் தலைவி ஊரலருக்குக் காரணம் உரைக்கின்றாள். கூந்தலில் பூவைக் கண்டவளவிலேயே ஊர்ப்பார்வை மாறிவிட்டதே என்று தலைமகள் நொந்து கொள்ளினும், ஒருவனோடு ஒருத்திக்கு உறவு உண்டு என்பதற்கு மலர் போதுமான அடையாளம் என்று ஊரார் துணிவுற்று அலர் மொழிந்தனர் என்று நாம் அறிய வேண்டும். அம்பல் மூதுார் அலர்வாய்ப் பெண்டிர் இன்னா இன்னுரை கேட்ட சின்னாள் அறியேன் போல உயிரேன் நறிய நாறும்நின் கதுப்பென் றேனே (நற். 143) “இன்னானுடன் இவர் மகளுக்குத் தொடர்பு என்று என் காது கேட்க ஊர்ப்பெண்டுகள் பேசுவதை அறிவேன். சில நாட்களாகத் தெரிந்து வைத்தும், தெரியாதவள் போல ஒன்றும் காட்டிக் கொள்ளாதிருந்தேன். ஒருநாள் நின் கூந்தல் நறுமணம் வீசுகின்றதே என்று கேட்டுவிட்டேன்' என்று தாய் தன் மகள் உடன் போகியதற்குத் தானே காரணம் எனச் சொல்லுகின்றாள். குமரியர் கூழையில் பூமணத்திற்கு இடமில்லை; நின் கூந்தல் மணக்கின்றதே என்று அன்னை வினவியதும் களவு வெளிப்பட்டுவிட்டது. இனி வீட்டில் இருத்தல் பொருந்தாது என்று மகள் தாய்க்கு அஞ்சி உடன்போயினாள். இயற்கை வனப்புமிக்க இடத்தில் இன்புறும் தலைவன் காதலியின் கருங்குழலில் பூங்கொத்துக்களைச் சூடி அணிசெய்து மகிழ்வான். வீடு செல்லும்போது தலைமகள் பூவைக் கூந்தலிலிருந்து அகற்றி விடுவாள். மலரை எடுத்தெறிந்து விட்டாலும், மலர் இருந்த கூந்தல் மணக்குமன்றோ? ஆதலின் தாய் மகளின் கூந்தலில் மலரைப் பார்க்காவிட்டாலும், அதன் மணத்தை அறிந்து, நின் கதுப்பு நறிய நாறும் என்று வினவினாள் எனக் கொள்க. காட்டிக் கொடுத்த முல்லை புல்லினத் தாய மகன்குடி வந்ததோர் முல்லை யொருகாழும் கண்ணியும் மெல்லியால் கூந்தலுட் பெய்து முடித்தேன்மன் தோழி யாய் வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே அன்னையும் அத்தனும் இல்லரா யாய்நான அன்னைமுன் வீழ்ந்தன்றப் பூ (கலி. 115) இடைமகன் சூடிய முல்லைத் தொடையையும் முல்லைச் சரத்தையும் புறத்தே தெரியாதபடி என் கூந்தலுக்கு உள்ளே வைத்து முடித்தேன்; அதனால் என்ன? நினைவின்றி வெண்ணெயைத் தடவவே, கூந்தல் விரிந்து உள்ளிருந்த பூ அன்னைக்கு முன்னே 乒, C,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/147&oldid=1238451" இலிருந்து மீள்விக்கப்பட்டது