பக்கம்:தமிழ்க் காதல்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

139



முடிபுகள்

மேற் செய்த ஆராய்ச்சியால் கண்ட தெளிவு என்ன? மணந்த குமரியரை மணவாக் குமரியரினின்றும் வேறுபடுத்திக் காட்டும் நோக்கமே கரணத் தோற்றத்திற்குக் காரணம் ஆம்: காலிற் கிடந்த சிலம்பை அகற்றுவது ஒரு கரணம். கூந்தல் மேல் மலரணிவது ஒரு கரணம். இவ் விரண்டும் பண்டைத் திருமணக் காலத்துப் பரவலாக வழக்கில் இருந்த கரணங்கள் என்று தெளிகின்றோம். இவள் மனைவியானாள் என்ற அறநிலையைச் சிலம்பு கழித்த அடியாலும், மலர் வேய்ந்த முடியாலும் அறிந்து கொள்ளலாம்; சிலம்பு இன்மையை நெருங்கிக் காணவேண்டும் என்பதில்லை. செவிக்குச் சிலம்பின் ஒசை கேளாமையால், இவள் மனைவிமை எய்தியவள் என்பதனைச் சேய்மையிலேயே விளங்கிக் கொள்ளலாம். மலர்சூடியிருப்பதை அணுகிக் காணவேண்டுவதில்லை; மூக்கிற்குப் பூமணம் வந்து தாக்குதலால், இவள் இல்லறத்தி என்று சேய்மைக் கண்னேயே முடிவு கொள்ளலாம். அடியாலும் முடியாலும் இன்மைக் குறியாலும் கன்னிமை கழிந்த மனையாட்டி என்பதனைத் தமிழ்ச் சமுதாயம் எல்லாரையும் அறியச் செய்தது. மனமாகி யாளைத் தோற்றத்தால் குமரியென மயங்கி விடாதவாறும், அங்ங்னம் மயங்கிப் பொய்யும் வழுவும் மேற்கொள்ளாதவாறும் கரணத் தடுப்புக் கண்டது தமிழ்ச் சமுதாயம். சடங்கு தோன்றக் காரணம் என்ன? சடங்கு என்ன? சடங்கின் குறிக்கோள் என்ன? இவற்றிற்கு இன்று நாம் விடை பலவாறு கூறலம். தொல்காப்பியம் சங்கப் பனுவல்களின் துணைகொண்டு, தமிழ்ச் சமுதாயம் காட்டும் விடைகளை மேலே கண்டோம். சடங்கு என்பது பெண் இனத்திற்கு மட்டுமா? மணமாகிய குமரனை மணமாகாக் குமரனினின்றும் வேறு படுத்திக் காட்ட வேண்டியதில்லையா? இவன் திருமணத்தான் என்பதற்கு அடையாளம் வேண்டாவா? இவ்வினாக்களுக்கு அறிவு ஒப்பும் நேரிய மறுமொழி தரமுடியாதுதான். கற்பு இருபாலார்க்கும் பொது என்று நாம் இன்று கொள்வதுபோலப் பண்டைத் தமிழ்ச் சமுதாயம் கொள்ளாமலில்லை; கொண்டிருந்தது. எனினும் வழிவழிப்பட்ட சில செயல் முறைகளை நடைமுறையில் ஒருவாறு ஒப்புக்கொண்டு குடும்பவியலைப் போற்றியது; போற்றும் பொறுப்பைச் செறிவும் நிறைவும் மிக்க பெண்ணினத்துக்கு அளித்தது. பலதாரமணம் ஆடவர்க்கு வழக்காறாக இருந்தமையின், இவன் மனங்கொண்டான் என அடையாளம் விதிக்கவேண்டும் என்ற நிலை தோன்றவில்லை. "தீதிலா வடமீனின் திறம் இவள் திறம்” என்று கண்ணகியின் கற்பின் மாட்சியைப் பாராட்டினார் இளங்கோ. கோவலனைப் பாராட்டும்போது அவர் பாராட்டிய தென்ன? g -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/153&oldid=1238485" இலிருந்து மீள்விக்கப்பட்டது