பக்கம்:தமிழ்க் காதல்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

தமிழ்க் காதல்



மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம் பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக் கண்டேத்தும் செவ்வேளென் றிசைபோக்கிக் காதலாற் கொண்டேத்தும் கிழமையான் கோவலன் ஒருவன் மணமாகாப் பெண்டிர் பலரைக் காதலிக்கலாம். ஒருவனை மணமாகாப் பெண்டிர் பலரும் காதலிக்கலாம். இவை தமிழ்ச் சமுதாயத்தின் குறிக்கோள் அல்ல. ஒருவன் ஒருத்தி என்பதுவே அதன் குறிக்கோள். எனினும் ஒருவன் பலர் என்னும் நடைமுறைக்கு இணங்கிச் சமுதாயம் இயங்க வேண்டியதாயிற்று. அதனாலன்றோ பிறன்மனை நயவாமை என்ற அறம்போலப் பிறன் கணவனை நயவாமை என்ற அறம் தோன்ற இடமில்லை. - களவு கற்பு என்னும் காதல் நிலைகளும், வெறியாட்டு அலர் உடன்போக்கு கரணம் முதலான வழக்காறுகளும் தமிழ்ச் சமுதாயத்தில் காணப்பட்டவை. இவற்றையே அக விலக்கியத்திலும் காண்கின்றோம். ஆகவே அகத்திணையியல் கண்கண்ட சமுதாய அடிப்படையுடையது. நடைமுறை தழுவியது, மெய்யானது என்று உணர்வோமாக "இல்லது” என்று நாட்ட எழுதினார் இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் (ப. 30) அகத்திண்ை பொய்க் கூறுகளின் புனைவா? எல்லாம் புனைநெறி வழக்கா? இல்லை என்பர் தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் (தொல், 999). தமிழ்ச் சமுதாயத்தில் இருந்தாலும், தகாத மரபுகளுக்கு அகத்தினையில் இடமில்லை? தக்க மரபுகளுக்கு மிக்க இடமுண்டு. இது பொய்யெனப் படாது, அறிவுடைக் கற்பனையாகும். இதனைத் தொல்காப்பியர் புலன்நெறி வழக்கு என்று தெளிவாகக் கூறுவர். இறையனாரகப் பொருளும் அதன் உரையும் அவற்றின் வழிவந்த கருத்துரைகளும் அகத்திணைக்கு நேர் முரணாக எழுதிய இடங்கள் பல. பொய்யாப்புலனெறி வழக்கைப் பொய்ந்நெறிவழக்கு (இல்லது) என்று எழுதிய இவ்விடம் அவற்றுள் ஒன்று. . XII - 2. நில அடிப்படை * அகத்திணை அமைப்பு உருவாதற்கு உதவிய ஏதுக்கள் மூன்றனுள், முதலாவதாகிய சமுதாய அடிப்படையை இது காறும் ஆராய்ந்தோம். அடுத்து இனி ஆராயத்தக்கது புறநிலை என்னும் நில அடிப்படையாகும். இவண்கூறும் கருத்துக்களைச் சமுதாய அடிப்படைக்கும் கொள்ளலாம். ஏன்? எவ்வழியான் வரும் சூழ்நிலைகளும் ஒடிப்பரவி முடிவில் ஒன்றாய்க் கலக்குமிடம் சமுதாயக் கடலன்றோ? எனினும், அங்ங்னம் கலந்த கூறுகளை கூறுகளுள் நிலச்சார்பாலும் காலச் சார்பாலும் அகத்திணை பெற்ற இயற்கைச் சாயல்களை தனித்தெடுத்துக் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/154&oldid=1238487" இலிருந்து மீள்விக்கப்பட்டது