பக்கம்:தமிழ்க் காதல்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

143


என்று சிறுபாணாற்றுப் படையில், புலவர் நத்தத்தனார் புரவலன் நல்லியக் கோடனை நானில உரிமை காட்டிப் போற்றுவர். “நாடன் என்கோ ஊரன் என்கோ பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ” (புறம், 43) எனப் பொய்கையார் சேரமான் கோக்கோதை மார்பனை ஒர் இரவலனுக்கு அறிமுகப்படுத்துவர். நானிலம் உடைய வேந்தன், ஆதலால் பெருஞ்செல்வம் உடையன் என்பது இதன் கருத்து என அதன் உரைகாரர் விளக்குதலையும் நினைக. சேரன் செங்குட்டுவன் பத்தினிக்கல் கொணர வடநாடு சென்றான். வஞ்சித் தலைநகரில் அவன் பிரிவுக்கு ஆற்றாது கோப்பெருந் தேவி துயருற்றாள். துயருடைத் தேவி குறத்தியர் பாணியும் உழவர் பாணியும் கோவலர் பாணியும் பரதவ மகளிர் பாணியும் ஆக நானில இசைகளையும் செவியுற்றாள் என்று சிலப்பதிகாரம் நீர்ப்படைக் காதை நவிலுகின்றது. தமிழினம் திணைநெஞ்சம் உடையது. அந் நெஞ்சப்படி வளர்ந்தது. வாழ்ந்தது என்ற தொல்லோட்டங்களைச் சிலவாறாகக் கண்டோம். இத்திணைச் சிந்தனை இவ்வியலின் முதற்கண் மொழிந்த தமிழினத்தின் உலகச் சிந்தனைக்கு முற்றும் இயைந்தது. இவ்வுலக வாழ்க்கை நன்கு செழிக் வேண்டும் என்று விரும்புபவரே தாம் வாழும் ஞாலப் பகுதியையும், அதன் இயற்கைக் கூறுகளையும் நாடித் துருவி அறிந்து கொள்வர். அறிந்து சூழ்நிலைக்கு ஏற்பச் சமுதாய நெறிகளை ஆக்கி அமைத்துக் கொள்வர். உடற்கூறு அறியாதான் நன்மருத்துவனாய் ஒளிர முடியுமா? - . XIII சாதிமதச் சார்பின்மை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின் தமிழில் தோன்றிய சிறிய பெரிய இலக்கியத்திற்கெல்லாம் சமயச் சார்பும் சாதிச் சார்பும் உண்டு. இலக்கியம் பெற்ற இப் புதிய உறவுகளை இலக்கிய வரலாறு கற்குநர் அறிகுவர். திணைமக்கள் என்ற இயற்கைப் பாகுபாடு உடையவராகச் சங்கத் தமிழ்மக்கள் விளங்கினர். சங்கப் பின்மக்களோ, சமய மக்களாகவும் சாதிமக்களாகவும் சில அயற் சூழ்நிலைகளால் பிரிவுண்டனர்; தமக்குள்ளே ஏற்றத்தாழ்வு செய்து கொண்டனர். இலக்கியப் பிறவிக்குச் சமுதாயமே தாயாதலின், சாதி சமயக் கோட்பட்ட இடைக்காலத் தமிழ்ச் சமுதாயும், அன்ன இலக்கியங்களையே தோற்றிற்று சங்கவிலக்கியம் போல்பவற்றைப் பிறப்பிக்கும் ஆற்றலை இழந்து விட்டது. இடைக்காலத்தோர் காதல் முதலாம் வாழ்க்கைக் கூறனைத்தையும் சாதி சமயக் கண்கொண்டே மதித்தனர்.அன்னவர் உள்ளம் சாதி நெஞ்சாகவும் சமய நெஞ்சாகவும் புதிய வடிவு பெற்றது. அன்னோர் தம் இல்லற துறவறமெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/157&oldid=1238491" இலிருந்து மீள்விக்கப்பட்டது