பக்கம்:தமிழ்க் காதல்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

தமிழ்க் காதல்


சாதிசமய வரம்புக்கு உட்பட்டே வளர்ந்து வந்தன. இக்காலப் பெருங் காட்பியங்களுள் ஒன்று சீவகசிந்தாமணி. கோவிந்தன் என்னும் இடையர் கோன் தன் பகைவர்களை வெல்லுபவனுக்குத் தன்மகள் கோவிந்தையை மணஞ்செய்து அளிப்பதாகப் பறையறைந்தான். சத்திரியப் பிறப்பு (அல்லது வணிக வளர்ப்பு) உடைய சீவகன் கோவிந்தனது எதிரிகளை வென்றான். எனினும் இடைமகளாகிய கோவிந்தையை மணங் கொண்டானா? குலநினையல் நம்பி, கொழுங்கயற்கண் வள்ளி நலனுகர்ந் தானன்றே நறுந்தார் முருகன்; நிலமகட்குக் கேள்வனும் நீள்திரை நப்பின்னை இலவலர்வாய் இன்னமிர்தம் எய்தினான் அன்றே (சீவக. 483) இது இடையர்கோன் கோவிந்தன் சீவகனுக்குச் செய்யும் வேண்டுகோள் குலவேற்றுமையை நினையாதே; தெய்வ முருகன் குற வள்ளியை மணக்கவில்லையா? திருமால் இடையர் குலத்து நப்பின்னையைத் திருமணங் கொள்ளவில்லையா? என்று ஏதுக் காட்டுகிறான் கோவிந்தன். பயனில்லை. சீவகன் சமணனாயினும் சாதிமை கொண்டவன். முருகன் திருமால் போன்ற தெய்வங்கள் சாதிமாறி வரையலாம்; “பொன்னிழை மகளிர் ஒவ்வாதவரை முன் புணர்தல் செல்லார். இன்னதான் முறைமை மாந்தர்க்கு என மனத்து எண்ணினானே' என்று சீவகன் சாதிப்பற்றைத் திருத்தக்க தேவர் வலியுறுத்துகிறார். முடிவில் நடந்தது என்ன? சீவகன் தான் மணவாது தன் தோழனான பதுமுகனுக்குக் கோவிந்தையை மணப்பித்தான். சூர்ப்பனகை இராமனைக் காதலித்தாள். அக்காதல் உணர்ச்சிக்குக் கற்புடை இராமன் உடன்படான் என்பதை யாவரும் அறிவர்; எனினும் இராமனது உரையாடல் சூர்ப்பனகைக்குக் காதற்கவர்ச்சியை ஊட்டிற்று. அவளோடு சிறுபொழுது நகையாட ஆசைப்பட்டு விட்டான். தான் பிரமன்வழி வந்தவள் எனவும், உயர்ந்த அந்தணர் குலத்தவள் எனவும் சூர்ப்பனகை தன் குலப்பெருமையை விளம்பினாள். இவளைத் தட்டிக் கழிப்பது எப்படி என்று எண்ணிய இராமனுக்குச் சாதிநெறி நினைவு வந்தது? ஒரு சாதியான், தன் சாதிப் பெண்ணையும் தன் கீழ்ச்சாதிப் பெண்ணையும் மணக்கலாம்; மேற்சாதியாளை மணக்கலாகாது என்பது மனுதருமம். , - . . சுந்தரி மரபிற் கொத்த தொன்மையின் துணிவிற்றன்றால் - அந்தணர் பர்வை நீ யான் அரசரில் வந்தேன் மேலாய சாதியிற் பிறந்த உன்னை, சத்திரியனாகிய நான் மணப்பது தொன்மை முறையன்றே என்று சாதிவேற்றுமை காட்டினான். இராமன். தன்னைக் காதலிக்கின்றாள் என்பதைத் தெளிவாக அறிந்தும், இராமன் அதனை வெட்டென மறுக்க வேண்டாவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/158&oldid=1238492" இலிருந்து மீள்விக்கப்பட்டது