பக்கம்:தமிழ்க் காதல்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

149



ஏற்றைப் புல்லினான் இவன், இவனுக்கே நம்மகள் உரியவள் என்று நம் சுற்றத்தார் ஒரு நாள் வைத்து என்னைக் கொடுப்பது என்ன? எந்நாள் ஏற்றை அணிந்தான், அணைக்க முயன்றான். முயன்று அதன் கோட்டின்மேற் பாய்ந்தான், அந்நாளே, அக்கணமே என் நெஞ்சினுள் அவன் பாய்ந்து அமர்ந்தான்; காளையைத் தழுவுமுன்னரே என் காதல் இவனுள்ளத்தைத் தழுவிற்று என உள்ளப்புணர்வு மொழிகின்றாள் ஒரு முல்லைப் பெண்னாள்: முல்லைத் தெய்வம் திருமால் முல்லைநிலத் தெய்வம்.ஆயர்கள் திருமால் அன்பினர்; திணைத்தெய்வப் பற்றுடையவர். பல முல்லைக் கலிப்பாடல்கள் தெய்வ வணக்கமாகவும் வாழ்த்தாகவும் முடிகின்றன. நானில மக்களுள்ளும் முல்லைத்திணையினர் எவ்வகை வினைக்கும் தெய்வம் பரவுவர்; எல்லாம் தெய்வச் செயலெனக் கருதுவர். அதனாற்போலும் தொல்காப்பியர் “மாயோன் மேய காடுறை யுலகம்” என்று தெய்வவரிசையில் முல்லைக்கு முதலிடம் அளித்தனர். தொழுவில் ஆனேறுகள் அவிழ்த்து விடப்பட்டன. செவிமறைக் காளையை ஒரிளைஞன் அடக்கி மடக்கிப் புல்லினான். அவன் தலையிற் சூடிய முல்லைக்கண்ணியை மாட்டின் கொம்பு அலைத்து வீசியெறிந்தது. அக்கண்ணியின் ஒரு முல்லைப்பூ தனித்துச்சென்று பார்வைக் கூட்டத்தில் இருந்த பெண்ணொருத்தியின் கூந்தலுள் வீழ்ந்தது காண். மணமுடைய முல்லைப்பூவை மன்னங்கூட்டும்பூவாக அந்நங்கை போற்றிப் பொதிந்தாள். இச்செய்தி கேட்ட பெற்றோர் துடித்திலர் அப்பூவுடையான் யார் என்று சினந்திலர்: ஊர் யாது சொல்லுமோ என்று கவன்றிலர். இது தெய்வத் திருமாலின் அறிவிப்பு என்று தெளிந்து, மனமகிழ்ந்து அப்பூவாளனைத் தம் மகளின் மணவாளனாக்கிக் கொண்டனர். - மண்ணிமா சற்றநின் கூழையுள் ஏறவன் கண்ணிதந் திட்ட தெனக் கேட்டுத் திண்ணிதாத் தெய்வமால் காட்டிற் றிவட்கென நின்னையப் பொய்யில் பொதுவற் கடைசூழ்ந்தார் தந்தையோடு ஐயன்மார் எல்லாம் ஒருங்கு (கலி. 107) XV பாலைத்தினையும் கோடைக்காலமும் நடுவண் ஐந்திணை நடுவண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே (தொல், 947) 1. இம்முறை பற்றியே, வில்லொடிப்பதற்கு முன் இராமனுக்கும் சீதைக்கும் உள்ளப்புணர்ச்சி நிகழ்ந்தது எனப் பாடுவர் கம்பர். 乡.11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/163&oldid=1238498" இலிருந்து மீள்விக்கப்பட்டது