பக்கம்:தமிழ்க் காதல்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

தமிழ்க் காதல்



வில்லலைத் துண்ணும் வல்லாண் வாழ்க்கைத் தமிழ்கெழு மூவர் காக்கும் - - மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே (அகம். 31) வானினப் புகவின் வடுகர் தேஎத்த நிழற்கவின் இழந்த நீரில் நீளிடை அழலவிர் அருஞ்சுரம் நெடிய என்னாது (அகம், 213) செந்துதல் யானை வேங்கடம் தழிஇ வெம்முனை அருஞ்சுரம் இறந்தோர் (அகம். 265) தமிழ்மொழி வழங்காத அயல்நாட்டுச் சுரங்களைத் தலைவன் பொருளிட்டுவான் கடந்து செல்கின்றான். மாற்றுமொழியும் வேற்றுநாடும் புதிய பாலை வழியும் காதலியின் அவலத்திற்கு ஏதுவாகின்றன. வேங்கடம் என்ற சொற்றானும் வேம் + கடம் எனப் - பிரிவுற்று, வேகும்சுரம் (பாலை நிலம்) என்று பொருள் தருதல் காண்க. தமிழ்கூறு நல்லுலகத்தினையும் அதன் ஒழுகலாற்றையுமே சொல்லுவதாக வரம்பு கொண்டமையின், தொல்காப்பியர் தமிழக எல்லைக்குட்பட்ட நிலப்பாங்கினையும் பருவப்பாங்கினையுமே குறிப்பாராயினர். நம் எல்லைக்குள் முதுவேனில் தோன்றுதலின், பாலைக்குப் பெரும் பொழுது வரைந்தார்; சுரப்பகுதியின்மையின் நிலம் என ஒன்று வரையாதமைந்தார். XVI கடல்வழிச் செலவைப் பாடாமை - தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய முத்திசையானும் நீர்வளைவுண்டது. 'முந்நீர்’ என்னும் தமிழ்க்கிளவி இம் முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது சுட்டுதற்கென்றே தோன்றியது. முந்நீர் விழவின் நெடியோன் (புறம், 9) முந்நீர் வழங்கு நாவாய் போலவும் (புறம், 13) முந்நீர் உடுத்தவில் வியனுலகறிய (புறம். 382) முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை (தொல், 979) இப்பழஞ் சொல்லின் அரும்பொருள் சங்கப்பிற் காலத்தே வழக்கில் இல்லை. முந்நீர் - கடல் என்று பொதுச் சொல்லாகக் கருதினர். யாற்றுநீர் ஊற்றுநீர் மழைநீர் என்று விரித்துரைத்தனர் புறநானூற்று உரையாசிரியர் (புறம்). அதனை மறுத்து, படைத்தல் அழித்தல் காத்தலாகிய முச் செய்கை (முந்நீர்மை) கொண்டது கடல் என்று சொல் விளக்கம் செய்தார் அடியார்க்கு நல்லார் (சிலப். 17). நச்சினார்க்கினியரும் இக்கருத்தினரே என்று பெரும் பாணாற்றுப் படையாலும் சிந்தாமணியாலும் (செய்யுள்.5) அறியலாம். இச்சொல் முப்புறமும் தமிழகத்தை வளைத்துக் கிடக்கும் ஒரு பெரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/166&oldid=1238503" இலிருந்து மீள்விக்கப்பட்டது