பக்கம்:தமிழ்க் காதல்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

159



நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி: முத்தங் கொடுக்குது வெள்ளைப்பசு - மடி முட்டிக் குடிக்குது கன்றுக் குட்டி இது கவிமணியின் இயற்கைப்பாட்டு. மெய்யாகச் சொல்லின் இயற்கைப் புலவர் என்பார், முற்றும் இயற்கை பாடியவர் அல்லர். இயற்கையைக் கிடந்தாங்குக் காட்டுதல் அறிவியல்; நினைத்தாங்குப் புனைதல் கவியியல் புலவன் இயற்கையாகப் பாடும்போது மனிதச் சாயலைப் பூசிக் காட்டுகின்றான். காட்டாது காட்டின் புலவனாகான். 'வெள்ளைப்பசு முத்தங் கொடுக்குது என்னும்போது மானிடவொழுக்கம் புகுந்துவிட்டது. இயற்கையைத் தலைமைப் பொருளாக மேற்கொண்டு பாடுதலின், இன்னோர் இயற்கைப்புலவர் எனப்படுவர். ‘சங்க விலக்கியத்தில் தனியியற்கை பற்றி ஒரு பாடல்கூட இல்லை தனியாக இயற்கையைப் புனைந்ததில்லை” என்ற நுண்மாண் கருத்தினை முதற்கண் கண்டு எழுதியவர் டாக்டர் வரதராசனார். சங்க இலக்கியமும் இயற்கையும் என்னும் ஆராய்ச்சி நூலில் இதன் விளக்கத்தைக் காண்க. r மக்களின் செயலுக்கும் ஒழுகலாற்றிற்கும் பயன் செய்யும் துணைவனாகத்தான் இயற்கை விள்ங்கிற்று:சங்கத்தார் இயற்கையை யெல்லாம் பாட்டுத்தொடுக்க முன்ைந்தாரிலர். நாடெங்கனும் காடெங்கனும் மண்டிக்கிடக்கும் இயற்கைப் பரப்பில், மக்கள் வாழ்வொடு கலந்த சில இயற்கைப் பகுதிகளே புலவர்தம் அறிவைக் கவர்ந்தன. பாடும் தகுதிப்பாடு பெற்றன. அல்லாதவை அழகுடையவேனும், மக்கட்கு ஊழியப் படாமையின், சங்கப் பாட்டில் ஏறவில்லை. பண்டைத் தமிழ் மக்கள் பயன்கொண்ட இயற்கைப் பொருள்கள் எவை? ப்யன் கொண்ட முறைகள் என்ன? புலவர்களால் பாடுபெற்ற இயற்கைப் புனைவுகள் யா? இவற்றை ஈண்டு விரித்துரைக்க வேண்டா. ஒன்றுமட்டும் அழுத்தமாக அறைய விரும்புவன். தொல்காப்பியர் அகத்தினை புறத்திணை என்ற இரண்டின் இலக்கணங்களையும் வகுத்துரைத்தவர்.வீரம், கொடை, புகழ் என்பனவெல்லாம் புறத்திணைப் பொருளன. இத்திணைக்கு முதற்பொருள் கருப்பொருள் அவர் கூறவில்லை. புறப் பாடல்களிலும் முதலும் கருவும் ஆகிய அமைப்பு முறை காணவில்லை. . . . . . . . முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே துவலுங் காலை முறைசிறந் தனவே - பாடலுட் பயின்றவை நாடுங் காலை (தொல், 948) இதனால் அகத்திணை உரிப்பொருளுக்கே புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் ஆகிய காதற் பொருளுக்கே முதலும் கருவும் வகுக்கப்பட்டன, பயன்பட்டன. பாடப் பட்டன என்பது தெளிவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/173&oldid=1238512" இலிருந்து மீள்விக்கப்பட்டது