பக்கம்:தமிழ்க் காதல்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

169



கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக் கைம்மை யுய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி - ஒங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும் (குறுந். 69) எனத் தலையாய கற்பினை மந்திக் குரங்கினிடம் கண்டு போற்றுவர். ஒரு மந்தியின் களவொழுக்கத்தையும் ஒருமந்தியின் கற்பொழுக்கத் தையும் சங்கச் சான்றோர்கள் நமக்குப் புலப்படுத்தியுள்ளனர். இவ்வொழுக்க நாகரிகம் மந்திகளுக்கு எங்ங்னம் ஏற்பட்டது? மக்கள் நாகரிகத்தைச் சான்றோர்கள் மந்திமேல் ஏற்றிக் கூறிவிட்டனர் என்று எண்ணலாமா? இஃதோர் இலக்கியநெறி என்று சொல்ல முற்படலாமா? நான் அங்ங்ணம் கருதுகிலேன். பிறர் செய்வனவற்றை உற்றுப் பார்த்து அப்படியே செய்யவல்ல ஆற்றலும் அறிவும் குழந்தைபோல் குரங்கினத்துக்கு உண்டு. உப்பு வாணிகச் சிறுவர்கள் கிலுகிலுப்பை ஆட்டுவதைப் பார்த்துக் குரங்கும் கிளிஞ்சலுக்குள் முத்தையிட்டு ஆட்டும் என நல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப் படையில் குறித்திருப்பதைக் காண்க. ஒரு மானிட மகள் பகற்குறிக்கண் களவொழுக்கத்திற் காதலனைக் கூடிக்குலைந்த கூந்தலைத் தெளிந்த நீரில் திருத்தியிருக்கக் கூடும்.இதனைப் பார்த்துக் கொண்டிருந்த மந்தி தானும் அங்ங்னம் செய்தது போலும். கணவன் எதிர்பாராது இறந்தபோது, கற்புடைநங்கைமலைமேல் ஏறிப்போய் மண்மேல் விழுந்து மாய்தலுண்டு. -. . - தொழுநாள் இதுவெனத் தோன்ற வாழ்த்தி மலைத்தலை யேறியோர் மால்விசும் பேணியில் கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள் (சிலப். 23) என இளங்கோ இவ்வகை மாய்வைச் சுட்டுவர். அங்ஙனம் ஒரு மானிடன் மலையேறி உயிர்விட்ட நிகழ்ச்சியைக் குறிஞ்சிக்குரங்கு கண்டு உளங்கொண்டு, தன் கடுவன் இறந்தபோது வரை பாய்ந்தது. போலும். கருத்து முடிபு யாதாயினும்,இரு திணையிடத்தும் ஒத்த காதற் கூறுகளைப் புலவர்கள் கண்டனர் எனவும், தமிழினப் புலவர்கள் இங்ங்னம் காணும் நோக்கில் வளர்ந்திருந்தனர் எனவும் அறியலாம். - உள்ளுறையுவமங்கள் - உள்ளுறையுவமம் என்பது தமிழ் இலக்கியத்திற்கே உரிய தனிநெறி. இவ்வுவமம் மிகவரம்பான இலக்கணம் உடையது; அகப்பொருளாம் ஐந்திணைக் கண்னேதான் ஆளுதற்குரியது. கருப்பொருள் என்னும் இயற்கைச் சூழலிலிருந்து புனையப்படுவது. வெளிப்பார்வைக்குச் செடிகொடி மரம் பறவை விலங்குகளின் செயல்களைப் புனைவது போற் காணப்படும். இவற்றை நேரடியாகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/183&oldid=1238525" இலிருந்து மீள்விக்கப்பட்டது