பக்கம்:தமிழ்க் காதல்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் குறிக்கோள்

189


வல்லவர்களே. இக்கிளையினர், ஆணாயினும் பெண்ணாயினும், விழைந்தாரைப் பெறுகை அரிது என்று அறுத்தெறிந்த பின்னுங்கூடக் காதல் ஒழியார், கவற்சி நீங்கார். காமம் விளைந்த பருவத்தாரைக் காதலித்தும் அக்காதல் அவரால் ஏற்கப்பெறா விட்டால், ஏக்கத்திற்கு எல்லையுளதோ? உள்ளம் அவமானத்தைத் தாங்க மாட்டுமா?

சங்கப்புலமகள் நக்கண்ணையார் ஆமூர் மல்லன்மேற் கொண்ட காதல் கைக்கிளைக் காமமாய் முடிந்தது. இவை பற்றிய செய்யுட்கள் அகத்திணையாகாது புறத்திணையாயின (புறம், 83, 84, 85) பருவம் அடைந்த நக்கண்ணையார் ஒத்த இளைஞனான மல்லனைக் காதலித்தும், இருபாற்கும் பருவத் தகுதியிருந்தும், உள்ளப்புணர்ப்பு இல்லைகாண். அகத்திணைக் கைக்கிளை என்பது அறியாமையால் ஒர் இளைஞன் அகநிலத்து சிறுபோது தோன்றி நீடியாது ஒழியும் காம மனநிலை. இக்கிளைக்கு ஆண்பால் முதல்வனாயினும், ஆண்பாற் கைக்கிளை என்று பெயர் பெறுதல் இன்று. இவனது காமம் நிற்கும் காலம் சிறிதேயாதலின், யாதொரு மெய்ப்பாடும் இவன் உறான். ஏனைக் கைக்கிளையினர். காமக் காழ்ப்புப் பெற்றவர்கள், பிரிவுக் கவலையுறுபவர்கள். ஆதலின் புறத்தே புலனாகும் மெய்ப்பாடுகள் அவரிடத்துத் தோன்றும். "யாமே புறஞ்சிறையிருந்தும் பொன்னன்னம்’ (புறம் 84) என்று நக்கண் ணையார் பசலை நிறம் உற்றதைத் தெரிவிப்பர். பருவம் வாய்ந்த இருபாலாரிடை நிகழும் அறிந்த கைக்கிளைக்கும், பருவம் வாய்ந்த ஆண்பாலுக்கு நிகழும் அறியாக் கைக்கிளைக்கும் உள்ளத்தில் உடலில் எண்ணத்தில் செயலில் காமத்தில் விளைவில் பெரும் வேறுபாடும் மாறுபாடும் உள. அகத்திணைக் கைக்கிளையான் தன் அறியாமையை உணர்ந்து திருந்துகின்றான். தூய்மையைக் காக்கின்றான். வாய்ப்பைப் பெறுகின்றான். உள்ளத்தளவில் ஒருபொழுது நிகழ்வதாயினும், துறை விரிவு இல்லாததாயினும், உரனும் பெருமையும் உடையதாதலின் திணை என்ற பெரும் பெயர்க்கு உரித்தாயிற்று, எழுதிணையுள் ஒன்றாக, ஒருபிரிவாக எண்ணப்பட்டது. ஏனைக் கைக்கிளைகளே புறத்திணையில் துறையளவாய் நிற்கின்றன.


VI


2. பெருந்திணைக் குறிக்கோள்

ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்

செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே (தொல். 996)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/203&oldid=1395803" இலிருந்து மீள்விக்கப்பட்டது