பக்கம்:தமிழ்க் காதல்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

தமிழ்க் காதல்


என்பது பெருந்திணையின் நூற்பா. இதற்கு யான் கருதிய பொருளை முன்னர்க் காணலாம் (பக். 89). பெருந்திணை அன்புசான்ற அகத்திணையின் ஒரு பிரிவு என்பதனை மறவாது நாம் பெருந் திணைக் கருத்தைக் காணவேண்டும். இத்திணைக்கு உரையாசிரியர் களும் பிறரும் இந்நாள்வரை சொல்லிவரும் பொருள்களாவன:

1. பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்.

2. ஒருவன் ஒருத்தியிடம் கழிகாமம் கொள்ளுதல் அவளை அடையப் பெறாது மடலேறுதல்.

3. தனக்கு இளைய பருவத்தாளைக் கூடுதல் நெறியாகும். அவ்வாறின்றி ஒப்பும் முப்பும் உடைய பருவத்தாளைக் கூடி நுகர்தல்.

4 தலைவியின் இளமைக்கு ஒவ்வாது ஆடவன் மிக முதிர்ந்திருத்தல்.

5. இளமைதீர்ந்து முதிர்ந்த வயதில் துறவுகொள்ளுதல் நெறி; அவ்வாறின்றி இருவரும் காமநுகர்தல்.

6 தேறுதல் அடையாது அறிவழிக்கும் கழிகாமம் கொள்ளுதல்.

7. கரைகடந்த காமத்தால் விரும்பாதவரை வலிதிற்புணர்தல்.


ஐந்திணையாவது ஒத்த அன்பால் உண்டாகும் இன்ப வொழுக்கங்கள் எனவும், கைக்கிளையாவது ஒருபக்க அன்பால் உண்டாகும் தாழ்ந்த இன்பவொழுக்கம் எனவும், பெருந் திணையாவது ஏற்றத்தாழ்வான இருபக்க அன்பால் உண்டாகும், மற்றொரு வகையான தாழ்ந்த இன்பவொழுக்கம் எனவும் இளவழகனார் உரைப்பர். அதன்பின் பெருந்திணையின் தாழ்வு பற்றிப் பின்வருவமாறு விளக்குவர் முதலில் மடலேறுவன் என்று தலைவன் சொல்லிப் பார்ப்பான். அதற்கத் தலைவியைச் சார்ந்தோர் இசையாவிட்டால், தலைவன் மடலேற வேண்டிய கட்டாயத்துக்கு வரநேரும். அப்போது தலைவியின் அன்பைவிடத் தலைவன் அன்பு மிக்க உச்சநிலையை எய்தும். மடலேறும் நிகழ்ச்சி வெறும் பேச்சு முறையில் இல்லாமல் இங்கனம் செயல் முறையில் வரும்போது தலைவன் அன்புக்கும் தலைவியின் அன்புக்கும் ஏற்றத்தாழ்வு காணப்படும். இனித் தலைவன் இளமை நீங்கிய முதியோனாயிருந்து தலைவி இளையவளாயிருந்தாலும், தலைவி மூத்தோளாயிருந்து தலைவன் இளையனாயிருந்தாலும், அல்லது இருவரும் இள்மைநீங்கிய முதுமைப் பருவத்தர்களாயிருந்தாலும், அவர்கள் ஒருவர்க்கொருவர் ஏற்றத்தாழ்வான அன்புள்ளவர்களாகவே இருப்பர். தலைவன் தலைவியர் இருவருள் ஒருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/204&oldid=1395804" இலிருந்து மீள்விக்கப்பட்டது