பக்கம்:தமிழ்க் காதல்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் குறிக்கோள்

191


தெளிவிழந்துபோன மிகு காமநிலையில் உள்ளவராயிருந்தாலும் அவர்கள் அன்பு ஏற்றத்தாழ்வாகவே இருக்கும். இனி, மிக்க காம நிலையில் ஒருவரையொருவர் வற்புறுத்தி நிற்கும்போதும் அவர்கள் அன்பு ஏற்றத்தாழ்வாயிருக்கும் என்பது சொல்லாமலே பெறப்படும்." [1]இளவழகனார் தரும் இவ்விளக்கம் பெருந்திணை பற்றி முன்னையோர் கொண்ட கருத்தினை விரித்துத் தெளிவாக்குகின்றது. உரையாசிரியர்களும் உரைநடையாசிரியர்களும் இத்திணைக்குத் தந்த விளக்கங்களில் மிகச் சிறு வேறுபாடுகள் உளவேனும், ஒவ்வாக் காமத்தையும் வலிந்த காமத்தையும் கூறுவது பெருந்திணை என்ற கருத்து முடிபில் இன்றுவரை யாரும் வேறுபட்டிலர். டாக்டர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை முதலானவரும் இக்கருத்தினரே.

பெரும் என்ற அடை

பெருந்திணை என்ற குறியீட்டில், பெரும் என்னும் பண்படை குறிப்பது எதனை? இது தெளிவானால் தினைப்பொருளே தெளிவாகிவிடும். பெருந்திணைக் காமம் உலகினுள் பெருவழக்கு ஆதலின் இந்த அடைபெற்றது என்பர் இளம்பூரணர். ஒவ்வாக் கூட்டமும் வலிந்த புணர்ச்சியும் சமுதாயத்தில் மிகுந்து காணப்படுகின்றனவா? காணப்படுமேல், அச்சமுதாயம் அழிந்தொழியாது நீடித்து இயங்குமா? நினைமின். தமிழர் எழுவகைத் திணைகொள்வர். ஆரியர் எண்வகை மணம் கூறுவர். இவ்விரண்டினையும் தொடர்பு படுத்துக் கூறும் ஒரு மரபு உண்டு: רי ஆசுரம் இராக் கதம் * கைக் கிளைத் திணை பைசாசம் J காந்தருவம் ஐந்திணை பிரமம் ~ பிரசாயத்தியம் ஆரிடம் > பெருந் திணை தெய்வம்


எல்லாவற்றினும் பெரிதாதலின் பெருந்திணையாயிற்று எனவும் பெரிதாயவாறு எப்படி எனின், அகத்தினை ஏழனுள் கைக்கிளை ஐந்திணை என்ற ஆறும் ஆசுரம் முதலாகக் காந்தருவம் வரையான நான்கினைத் தாம் பெறுகின்றன: பிரமம் முதலாக எஞ்சிய நான்கினையும் பெறும் ஒருதினை எது, அது பெருந்திணை


  1. அகத்தினையியல் விளக்கம், ப. 1324
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/205&oldid=1395806" இலிருந்து மீள்விக்கப்பட்டது