பக்கம்:தமிழ்க் காதல்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

தமிழ்க் காதல்


எனலாயிற்று என்பர் நச்சினார்க்கினியர். இது சிறு கணக்குநயமே யன்றிக் காரணம் ஆகாது. ஐந்து வரை எண்ணுதற்காக ஐவிரல்களைப் படைத்தான் என்று கட்டுரைப்பது போலும்.

1. பிரமமாவது: நாற்பத்தெட்டாண்டு பிரமசரியம் காத்தவனுக்குக் கன்னியை அணிகலம் அணிந்து தானமாகக் கொடுப்பது.
2. பிரசாபத்தியமாவது: மகளைக் கொள்ளுதற்கு உரிய கோத்திரத்தார் கொடுக்கும் பரிசப் பொருளை இரட்டித்துத் தம் மகட்கு அளிப்பது.
3. ஆரிடமாவது: தக்கான் ஒருவனுக்கு மகளைக் கொடுக்கும் - போது, பசுவோடு காளையைப் பொன்னணிந்து வழங்குவது.
4. தெய்வமாவது: வேள்வியாசானுக்கு வேள்வித்தி முன்னர் பெண்ணைத் தக்கிணையாகக் கொடுப்பது.

மேற்கூறிய ஆரிய மன நான்கிற்கும் ஏறிய மடற்றிறம் முதலாக வரும் தமிழ்ப் பெருந்திணைக்கும் என்னானும் பொருத்தக்கூறு உண்டா? பெருந்தினை நான்கு தன்மையுடையது என்று எண்ணிக்கையால் ஆரிய மணத்தோடு மாட்டி விட்டனர் போலும். ஆரிய மன்றல் நோக்கிப் பெருந்திணைப் பெயர் வைத்தனரேல், கந்தருவம் ஒன்றே பெறுந்திணை ஐந்திணை எனலாமா? குறுந்திணை எனல் வேண்டும். மூன்று பெறுகின்ற திணையைக் கைக்கிளை எனலாமா? இடைத்திணை எனல் வேண்டும்.

தமிழ் மண நெறிகளும் ஆரிய மணநெறிகளும் இன்னவகையில் ஒப்பு மையுடையன என்று காண்பது அறிவின்பாலது. அஃதன்றி, தமிழர் தம் தன்னேரில்லாப் படைப்பான் அகத்திணையின் உட்பிரிவாகிய பெருந்திணைப் பெயர் ஆரிய மணப் பிரிவுகளை எண்ணி இடப்பட்டது என்றல், சுருங்கச் சொல்லின், தமிழ் அகத்திணையையும் அதனைக் கண்ட சான்றோர் அறிவையும் அவமதிப்பதாகும். மேலும் தம் அறியாமையை நன்கு வெளிப்படுத்துவதுமாகும்.

இழி காமம் கூறும் திணையைப் பெருந்திணை என்றது, தாலி பெருகிற்று என்பதுபோல மங்கல வழக்கு என்று உரைப்பர் டாக்டர் சோமசுந்தர பாரதியார். சிறுதிணை என்று பெயரிடவேண்டிய ஒன்றைப் பெருந்திணை என்றனர்; இது அவையல் கிளவி என்று விளக்குவர்.ஆசிரியர் சிறுதிணை என்று பெயர் வைத்திருப்பின், அது அவையல் கிளவி ஆகிவிடுமா? கைக்கிளை என்னும் மற்றொரு உட்பெயரைப் பெருங்கிளை என்பதுபோல அமைத்திலர் என்பதை ஒப்புநோக்குக. இவற்றை யெல்லாம் மங்களமாக இசைக்க வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/206&oldid=1395807" இலிருந்து மீள்விக்கப்பட்டது