பக்கம்:தமிழ்க் காதல்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

தமிழ்க் காதல்



சான்றவிர்? வாழியோ சான்றவிர்! என்றும்
பிறர்நோயும் தந்நோய்போற் போற்றி அறனறிதல்
சான்றவர்க் கெல்லாம் கடனானால் இவ்விருந்த

சான்றீர்! உமக்கொன் றறிவுறுப்பேன் (கலி. 139)

என்று சான்றோர்கள் முன் எடுத்துரைப்பான். விரும்பாத பெண்ணை வேண்டிய ஒருவன் மடலேறி வருவானாயின், அவன் வீதிவரவைச் சமுதாயம் ஒப்புங்கொல்? அவன்பேச்சைப் பெரியவர்கள் ஏற்பார்களா? அத்தகைய ஒரு போக்கிற்கு இடங்கொடுத்தால், எப்பெண்ணையும் மடலேறிப் பெறச் சில காமுகர்கள் முனையமாட்டார்களா? தன்விழைவுப்படி ஒருவனைக் கணவனாகத் தேர்ந்து கொள்ளும் வாழ்க்கையுரிமை பெண்ணி னத்துக்கு உண்டு என்பது தமிழியம். பெற்றோர் கூறியவனைப் பிடிக்காவிட்டால் மறுக்கலாம்; கூறாதவனைப் பிடித்தால் மணக்கலாம்.இசையாத ஒரு பெண்ணை ஒராடவன் நச்சுவானாயின், அவன் தனித்த நிலையிலேர், அவளைத் தனித்துக் கடத்தியோ வலிவு செய்வான். ஊரறியவும் சான்றோர் கேட்கவும் மடலேறுவானோ? ஆதலின் விருப்பமில் கன்னியை வணக்குதற்கு ஒருவன் மடலூரான். மடலேற்றம் ஒத்த காமம் உடையார் மாட்டே நிகழ்வது. இது நிகழும் வரலாற்றைச் சிறிது விளக்குவாம்.

அன்புக் காதலர்கள்

கல்வியறிவுடைய ஒர் இளைஞன் பருவ அழகும் நன்னலமும் செறிந்த ஒரு நங்கையை ஒருநாள் காண்கின்றான். கண்டபொழுது சிறிதேயாயினும் இருவர் உள்ளமும் காதலால் ஒன்றிக் கலந்தன. இயற்கைப் புணர்ச்சியும் நிகழ்ந்ததுபோலும், அதன் பின்னர் அவ்விளைஞன் தன் காதலாளைக் காணப் பெற்றானிலன், இடந்தலைப்பாடோ, பாங்கற்கூட்டமோ, தோழியர் கூட்டமோ நடைபெற வழியில்லை. ஒருநாள் நனவுக்கூட்டம் கனவு போலாயிற்று, காமப் பசியைக் கிளறிற்று. என்செய்வான் இளந்தகை!

மின்னவிர் நுடக்கமும் கனவும்போல் மெய்காட்டி
என்னெஞ்சம் என்னொடு நில்லாமை நனிவெளவித்
தன்னலங் கரந்தாளைத் தலைப்படுமா றெவன்கொலோ (கலி. 138)
துளியிடை மின்னுப்போல் தோன்றி ஒருத்தி
ஒளியோடு உருவென்னைக் காட்டி அளியள் என்

நெஞ்சாறு கொண்டாள் அதற்கொண்டும் துஞ்சேன் (கலி. 139)

ஒருநாள் ஒருபொழுது அவளைக்கண்டு கலந்தவளவில் பிரிந்து போயினாளாதலின், மின்னலையும் கனவையும் உவமை கூறுகின்றான்; அவளும் தன்னைக் காதலித்தாள், சிரித்தாள், மேனி காட்டி மகிழ்வித்தாள் என்ற உண்மையை, “நகுபுடன் மெய்காட்டி”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/209&oldid=1395811" இலிருந்து மீள்விக்கப்பட்டது