பக்கம்:தமிழ்க் காதல்.pdf/213

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

200

தமிழ்க் காதல்



ஒரோஒகை தம்முள் தழிஇ ஒரோஒகை
ஒன்றன்கூ றாடையுடுப்பவரே யாயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதரோ

சென்ற இளமை தரற்கு (கலி. 18)

'உடுப்பதற்கு ஆடை இரண்டில்லை. உள்ளது ஒன்றேயாயினும் அதனை இருதுண்டாக்கி உடுத்துக் கோள்வோம். வாட்டும் வறுமையிலும் கூட்டு வாழ்வே வாழ்க்கை. இளமை செல்லும். சென்றுவிட்டபின், ஐயகோ, எத்துணைச் செல்வம் கிடைப்பினும் திரும்பவருமா? என்று வறுமையிலும் காமச்செம்மை பாடுகின்றாள் ஒர் மங்கை. இப்பெண்ணுள்ளத்தைக் கணவன் மதிக்கவேண்டும். ஆடவனுக்கு இளமை நீடிப்பினும் அவன்தலைவியின் இளமைக்குள் தானே இன்பம் துய்த்துக் கொள்ள வேண்டும்?அவளது இளமை கழிந்தபின்,அவனது இளமை யெச்சத்திற்குப் பொருளுண்டோ? பற்றுக்கோடு உண்டோ? பருவத்திற்கும் காமத்திற்கும்.உரிய உறவையும் பயனையும் காதலர்கள் உணர்ந்து ஒழுகவேண்டும். செலவழுங்கல் என்னும் அகத்துறை பெண்டாட்டியின் காமத்தைக் கணவன் பொருட்படுத்தி உடனிருப்பான் என்பதற்கு ஒரு சான்று (பக்.95) கொண்டானுக்கும் கொண்டாளுக்கும் உடல் மனநிலையில் ஒத்தமதிப்பாடு இருப்பின்இல்லறம் சிறக்கும் என்பர் பெத்தரண் ரசலார் தலைவன் சேண்சென்று பொருளிட்டிப் புகழ் எய்துதற்குத் தலைவி இசையவும் வேண்டும். பெண் தன் உள்ளுறும் காம வேட் கையை வெளிப்படக் கிளவாள். அஃது பெண்மையின் இயற்கை.


காமத் திணையிற் கண்ணின்று வரூஉம்
நானும்மடனும் பெண்மைய வாதலிற்
குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை

நெறிப்பட வாரா அவள்வயி னான (தொல். 1053)

அவள் நாணத்தால் மறைத்துக்கொண்டிருக்கும் காமக் குறிப்பை நுனித்து உணர்ந்து கண்டுகொள்ளல் ஆடவன் கடமை. காணத் தவறுவானாயின், அவளின் காமவுணர்வு கசப்புணர்வாக மாறி விடும்; அக் கசப்பு வாழ்க்கை முழுதும் பரவும். மனைவியின் காமப்பதத்தைப் புரிந்து கொள்பவனே சிறந்த கணவனாவான்; இல்லறத்தைக் காத்தவனாவான். செல்வம் திரட்டப் பலரோடு சென்றான் ஒரு தலைவன். நினைத்த பொருளளவு கிடைக்கவில்லை. பிரிந்திருக்கும் மனைவியின்நலத்தை எண்ணிப் பார்த்தான். உடன்வந்த பலர் பொருளிட்டிக் கொண்டிருக்கட்டும். தனக்குக் கிடைத்தது போதும் என்று, யாரிடமும் சொல்லாது வீடுவந்து சேர்ந்தான்.


1. Marriage and Morals, P. 115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/213&oldid=1395816" இலிருந்து மீள்விக்கப்பட்டது