பக்கம்:தமிழ்க் காதல்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அகத்திணைக் குறிக்கோள்

201



திருந்திழை அரிவை நின்னலம் உள்ளி
அருஞ்செயற் பொருட்பிணி பெருந்திரு வுறுகெனச்
சொல்லாது பெயர்தந் தேனே பல்பொறிச்
சிறுகண் யானை திரிதரும்

நெறிவிலங் கதர கானத் தானே (ஐங். 355)

பொருள் கிடக்க நின்னலத்தை மதித்து வந்தேன் என்று மனைவி முன்னர் எடுத்துரைக்கின்றான் ஒரு தலைவன். ஒர் இல்லறத் தான் பொருளிட்டப் போவேன் என்றான். அது கேட்ட தோழி நல்லது, செய்ய வேண்டியதுதான் என்றாள். தலைவியும் தலைவன் பிரிவிற்கு உடன்பட்டனள். “செய்பொருட்கு அகல்வர்; அது அதன் பண்பே' (நற்.24) என்று ஆடவரது இயல்பைப் புரிந்து கொண்டாள். ஈண்டுக் காட்டிய ஐங்குறுநூற்றாலும் நற்றிணையாலும் கணவனும் மனைவியும் விளங்கியவர்கள், ஒருவர் போக்கை ஏனையவர் மதித்து ஒழுகுபவர்கள் என்பது பெறப்படும். இங்ங்ன் விளங்கி மதித்து ஒழுகும் பண்புகள் ஐந்திணைக்கு உரியன.

வேறோரு தலைவன் செயலைக் காண்போம். அவன் ஐந்திணைத் தலைவனே, காதலியிடத்து அன்புடைய்வனே, மனக் குற்றம் இல்லாதவனே, எனினும் அளவறி வாழ்க்கை அறிந்தவன் அல்லன். காமத்தை நெடுநாள் கைவிட்டுப் பொருள் ஈட்டுவதிலேயே பெருந்ாட்டங் கொண்டவன். இல்லறத்தில் பொருளை முதன்மையாகக் கருதுகின்றான். அவனது மனைவியும் அப்படிக் கருதினால் அக்குடும்பம் ஒத்தவுணர்வு உடையது என்று சொல்லலாம். பெண் நெஞ்சம் என்றும் பொருளுக்கு முதன்மை கொடாது. யாது கூறினும், இளமையும் அவ்வின்பமுமே பெண்ணுள்ளத்தை மகிழ்விக்கும் (நற். 64) பொருளுக்குப் பிரியும் ஐந்திணைத் தலைவன் வருங்காலம் குறிப்பான். அக்கால எல்லைக்குள் அல்லது எல்லை முடிவில் வருவான், வரத் துடிப்பான். இன்பத் துய்ப்பின்றி இளமை யாண்டுபல கழிதலை விரும்பான்.

இளமையிற் சிறந்த வளமையும் இல்லை
இளமை கழிந்த பின்றை வளமை

காமம் தருதலும் இன்றே. (நற். 126)

என்பது அவன் தெளிவுடைக் கருத்து. ஐந்திணைத் தலைவன் இக்கருத்துப்படி ஒழுகாது, முற்றிய பொருட்காதல் கொண்டு இளமையைக் கழிப்பானாயின், பெருந்திணையாளன் ஆகிவிடுவான் என்று அறிக. "இளமை தீர்திறம்” என்ற தொடருக்கு தலைவியின் இளமையும் தன் இளமையும் வறிதே தீரும்படி, கழியும்படி, தலைவன் நடந்துகொள்ளும் முறை என்பது பொருள். பொருள்வயிற் பிரிந்தானாயினும், பிறபிரிவு மேற்கொண்டானாயினும், காலம் நீட்டியாது தலைவியொடு இளங்காமப் பயன் நுகரவேண்டும் என்பது இதன் கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/214&oldid=1395817" இலிருந்து மீள்விக்கப்பட்டது