பக்கம்:தமிழ்க் காதல்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

தமிழ்க் காதல்



இளமை தீர்திறம் என்னும் பெருத்திணைத் துறைக்குச் சங்கவிலக்கியத்தில் பாடல்கள் உண்டா? கலித்தொகையில் கூனும் குறளும் முடமும் செய்த சில காதற்காட்சிகள் வருகின்றன (94, 65). இத்துறைக்கு இவற்றை எடுத்துக் காட்டுவர் உரையாசிரியர்கள். பாரதியார் மேற்கோள் காட்டும் முடவனது காட்சி (கலி. 65) உரிய கவித்துறைக்கு நேரடியாகப் பொருந்துவதன்று. அது படைத்து மொழிந்த ஒரு கதையாகும். ஒரு குட்டையனுக்கும் ஒரு கூனிக்கும் நிகழும் காதற்பேச்சினையும் காதலொழுக்கத்தினையும் பற்றி மருதன்இளநாகனார் புனைந்து காட்டுவர் (கலி. 94) அவ்விருவரும் அரண்மனையில் குற்றேவல் செய்பவர்கள்; தமக்கெனத் தனிவீடு இல்லாதவர்கள்; அவர்கள் சூழ்நிலையையும் வாழ்க்கை முறை களையும் உட்கொண்டு அதற்குத்தக்க காதற்சொற்களையும் புணர்ச்சிப்போக்கினையும் அமைப்பர். கூனிகுறளன் குற்றேவலாளர் என்பதற்காக, இவர்தம் காதலொழுக்கம் பெருந்திணையாகாது. இக் காதலைப் பெருத்தினை என்று நாம் இதுவரை கருதி வருவது தவறு. ஐந்தினை என்பது செல்வர்கட்கே உரியதா, ஏழைகட்கு இல்லையா? யாண்டு இருவர் மாட்டு அன்பு உண்டு ஆண்டு ஐந்திணை உண்டு.

குறுந்தொகை நற்றிணை அகநானூறு ஐங்குறுநூறு என்ற அகத்தொகை நூல்களுக்கு ஐந்திணைத் துறைகளே எழுதியுள்ளனர். அந்நூல்களை ஐந்தினைத் தொகைகளாகவே நாம் கற்றும் ஆராய்ந்தும் வருகின்றோம். அகவிலக்கணத்தை நன்கு தெளிந்து, எழுதிய துறைகளை மீண்டும் ஒருமுறை அலசிப் பார்ப்பின். சில பாடல்களுக்குப் பெருந்திணைத் துறைகள் சொல்ல முடியும்!

புதன்மிசை நறுமலர் கவின்பெறத் தொடரிநின்
நலமிகு கூந்தல் தகைகெர்ளப் புனைய
வாரா தமையலோ இலரே நேரார்
நாடுபடு நன்கலந்தரீஇயர்

நீடினர் தோழிநங் காத லோரே. (ஐங். 463)

தலைவன் சொல்லிய கார்காலம் வந்துவிட்டது. வந்தும். நாளாயிற்று எதிர்பார்த்துப்பார்த்துத் தலைவன் வந்திலன்.விரைந்து வருவான், ஆற்றியிரு என்று சொல்லத் தோழிக்கு துணிவில்லை. நீடினர் என்பதனை உடன்படுகின்றாள். பகைவரிடம் திறை வாங்குவதனால் காலம் தாழ்த்தது போலும் எனக் காரணம் காட்டுகின்றாள். இளமை தீர் திறத்திற்கு இப்பாடல் ஒர் எடுத்துக்காட்டு, ‘என் யாக்கை காமத்தால் மெலிந்து ஏங்கி வறிதாயிற்று. இனி அவர் வரினும் என் நோய்க்கு மருந்தாகார்போன இடத்திலேயே அவர் இருப்பாராக (நற். (4) என்று ஒர் ஐந்திணைத் தலைவி பெருந்திணை மொழிகின்றாள். "அனைத்தால் தோழி நம் தொல்வினைப் பயனே’ (அகம் 234) என்ற தலைவியின் நோவிலும் பெருந்திணைக் குறிப்பு உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/215&oldid=1395818" இலிருந்து மீள்விக்கப்பட்டது