பக்கம்:தமிழ்க் காதல்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் குறிக்கோள்

209


அழிந்தொழியும் என்று காட்டுவதற்கென்றே இராமாயணம் அற நூல் அனைத்திற்கும் இலக்கிய நூலனைத்திற்கும் புறம்பாக ஒரு தொடருக்குப் பொருள் செய்யப் பாடுபடலாமா? அப்பொருள் கொள்ளத்தான் அத்தொடர் இடந்தருகின்றதா? மையில் மதியின் விளங்கு முகத்தாரை வெளவிக் கொளலும் அறனெனக் கண்டன்று அன்புடைய காதற்பெண்ணை இனிது மொழிந்து நலம் பாராட்டி மெல்லிய உணர்வூட்டி அணைத்துத் தழுவுதல் ஆண் முறை. காலம் மிக்க காதலன் அங்ங்னம் செய்யக் காத்திராது திடீரெனத் தழுவிக் கூடலும் உண்டு. இது புணர்முறையாகாது எனினும் அறத்திற்கு மாறில்லை. ஏன்? அவன் அன்பனாதலின். இதுவே இக் கலியடிகளின் கருத்து.

அவன் வெளவினன் முயங்கும் மாத்திரம் (கவி. 47)

தன்னை யறியாது சென்றேன்மற் றென்னை வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு (கலி. 51)

நரந்தம் நாறு இருங்கூந்தல் - எஞ்சாது நனிபற்றி (கலி. 94)

கபிலர் மேலும் பல கலிப்பாக்களில் ஆளும் வினைச் சொற்களை நினைக காதலன் தன் காம அழுத்தத்தைக் கூறுங்கால், ஆற்றலுடைய வினைக்கிளவிகளைக் கையாளும் அவர் இயல்பு விளங்கும்.

இக்கலிப்பாவின் (62) மாந்தர்கள் ஏவல் செய்யும்.அடியவர்கள் ஆதலால் பெருந்திணையாம் என்று நச்சினார்க்கினியரும் பிறரும் கொள்வர். பணியாளர்களுக்குத் தலைமையும் ஐந்திணையும் இல்லை என்பது இன்னோர் கோட்பாடு. இப்பிழையான கோட்பாட்டினால் தொல்காப்பியத்திற்கும் சங்க இலக்கியத்திற்கும் இவர்கள் கானும் அடிப்படை உண்மைகள் வழுவாகின்றன.

வேறல்லம் என்பதொன்று உண்டால் அவ னொடு மாறுண்டோ நெஞ்சே நமக்கு * (கலி, 62)

இதனால் தலைவியும் மனம் ஒன்றிக் காதலிக்கின்றாள் என்பது தெளிவு. உள்ளம் ஒத்த அன்பும், உடல் ஒத்த புணர்ச்சியும் இக்கலியிற் சொல்லப்படுதலின், இத் தலைமக்கள் ஐந்திணைக்கு உரியவர்களே.

மிக்க காமத்து மிடல் என்பதன் பொருள் ஆண் செய்யும் வம்புப் புணர்ச்சியன்று; ஐந்தினைத் தலைவி காமம் மிக்குக் செய்யும் துணிவுச் செயலாம். இத்துணிவுச் செயல்கள் யாவை? இப்பெருந் திணைத் துறைக்குச் சங்கப்பனுவலில் எடுத்துக்காட்டு நிரம்ப உண்டெனத் தோன்றவில்லை. எனினும் இச்செயல் யாதாகலாம். என்று ஊகித்து அறியவல்ல குறிப்புக்கள் உள. சில காமக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/222&oldid=1400213" இலிருந்து மீள்விக்கப்பட்டது