பக்கம்:தமிழ்க் காதல்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

தமிழ்க் காதல்


கருத்துக்கள் எண்ணத்தளவிலும் சொல்லளவிலும் அடங்கியிருக்கும் போது, நாணவெல்லைக் கடவாதபோது, ஐந்திணையாம் என்று முன்னர்க் கண்டோம். -

அருங்கடி அன்னை காவல் நீவிப் -
பெருங்கடை இறந்து மன்றம் போகிப்
பகலே பலருங் காண வாய்விட்டு
அகல்வயற் படப்பை அவனுர் வினவிச்
சென்மோ வாழி தோழி; பன்னாள்
கருவி வானம் பெய்யா தாயினும்
அருவி யார்க்கும் அயந்திகழ் சிலம்பின்
வான்றோய் மாமலை நாடனைச் -
சான்றோய் அல்லை என்றனம் வரற்கே. (நற். 365)

இஃது. ஒர் களவுத்திணைப். பாட்டு.தலைவன் விரைவில் மணக்க விரும்பிவில்லை. களவொழுக்கத்தை நீடிக்க விரும்புகின்றான். அவன் வந்திருப்பதை அறிந்துகொண்டும் அறியாதாள்போலத் தோழி சொல்லுகின்றாள். இனி நாம் செய்ய வேண்டுவது ஒன்றே ஒன்றுதான். அன்னையின் காவலையும் பெரிய கடைத்தெருவையும் கடந்து பலருங்காணப் பகற்காலத்தே புறப்படுவோம்; எல்லாரும் கேட்க அவனுர் எது என்று வாய்விட்டுக் கத்துவோம்; வரையாது ஒழுகும் நீ ஒரு சான்றோனா என்று அவனுளருக்குச் சென்று சொல்லிவிட்டுத் திரும்புவோம் எனத் தோழி அழுத்தமாகக் கழறுகின்றாள்.

கோடீர் இலங்குவளை ஞெகிழ நாள்தொறும்
பாடிய கலிழுங் கண்ணொடு புலம்பி
சங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழுவினி வாழியென் நெஞ்சே முன்ாது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபட்ல் சூழ்ந்திசின் அவருடைய நாட்டே (குறுந்-11)

இது கற்புத்திணைப்பாட்டு. தலைவனது பிரிவால் தலைவிக்கு உடல் மெலிந்துவளை கழல்கின்றது. கண்ணுக்கு உறக்க மில்லை. இல்லத்து இருப்புக் கொள்ளவில்லை. தலைவன் பொருளிட்டச் சென்ற இடம் நெடுந் தொலையாயினும், மொழி வேறுபட்ட நாடாயினும், அவன் இருக்கும் இடத்திற்குப் போக நினைக்கின்றாள். உய்திக்கு அதுதான் வழி என்று நெஞ்சிற்குச் சுட்டுகின்றாள். இங்ங்னம் களவிலாயினும் கற்பிலாயினும் ஐந்திணைக்கண் தலைவியர் தலைவன்மார் சென்ற தேயத்திற்குச் செல்ல நினைப்பதும், அதனை வாய்விட்டுக் கூறுவதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/223&oldid=1400291" இலிருந்து மீள்விக்கப்பட்டது