பக்கம்:தமிழ்க் காதல்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் குறிக்கோள்

213


தெளிவாகவும் அறிந்து கொள்ளுவதற்கு ஐந்தினையே உறுதுணை, பிற திணைகள் சிறு துணையே, கைக்கிளை விளையாக்காமம் என்னும் ஒரு துறையளவில், காட்சியளவில், தோன்றும்போதே இறுவாயாகின்றது. பெருந்திணைக்கு மிகுதி காட்டும் நான்கு துறையே உண்டு. ஐந்திணைத் துறைகளோ எண்ணில:

மரபுநிலை திரியா மாட்சிய வாகி
விரவும் பொருளும் விர்வும் என்ப (தொல், 190)

ஆதலின் நெறிக்கு உட்பட்டுப் புதியனவாய்ப் படைத்துக் கொள்ளக்கூடியவை, முதற்பொருள் கருப்பொருள் உள்ளுறை இன்னபிற பாடல் மரபெல்லாம் ஐந்திணை ஒழுக்கங்கட்கே வருபவை. புறத்திணைக்கண் வேறுவேறான கைக்கிளைகளையும் பெருந்திணைகளையும் பிற்கால இலக்கணர்கள் புதுவதாக வகுத்துக் காட்டியுள்ளனர். அன்ன புறத்தன்மை ஐந்திணைக்கு இல்லைகாண், புறப்பொருட் கைக்கிளை புறப் பொருள் பெருந்திணை என்பதுபோலப் புறப்பொருள் ஐந்திணை என ஒன்றில்லை காண். கைக்கிளை பெருந்திணை என்ற குறியீடுகளைக் கேட்பின், இவை அகமோ புறமோ என்று மயங்கும் மயக்கம் ஐந்திணைக்கு வராது. ஐந்திணைக் குறியீடும் பிரிவும் அகத்திணையிற்றான் வருவது. இச்சிறப்புப் போலும் ஐந்திணையும் அகத்திணையும் ஒன்றெனக் கொள்ளுமாறு அறிஞர்களை மயக்கிவிட்டது. முதலாகவும் இறுதியாகவும் எண்ணப்படும் கைக்கிளை பெருந்திணைகளை, ஒருப்ால் நிறுத்தி, நடுவண் உள்ள ஐந்திணையை ஒருபால் நிறுத்தி, உடன் வைத்தும் எதிரிட்டும் ஆராயின் அகத்திணையின் தன்மை இதுதான் என்பதனை முடியத் தெளியலாம். அத்தன்மை துறைபலவும் செய்யுள் பலவும் கொண்ட ஐந்திணைக்கண் குடிகொண்டு விளங்கவும் காணலாம். -

ஐந்திணைக் காதலின் இயல்பு

உடற்பருவம் இன்றேல் காமம் பிறவாது, சுரவாது என்பது கைக்கிளைக் கருத்து. ஆர்ந்து நிறைந்த காமம் துய்யாமையால் அறிவு கடந்த செயல்கள் நிகழும் என்பது பெருந்திணைக் கருத்து நாணமும் அறிவும் காமமும் ஒத்து நிற்றலால், பருவமுடையார் காதல் இன்பமாம் என்பது ஐந்திணைக் கருத்து. கைக்கிளையில் வாழ்க்கை தோன்றாது; பெருந்திணைக்கு வாழ்க்கையை விடுதல் கூடாது. கைக்கிளை இளைஞன் காமஞ்சான்ற இளையவளைக் காதலித்து ஐந்திணைக் காதலன் ஆவான். ஒருகால் பெருந்திண்ைக்குப் போகிய காதலர்கள் நெறியறிந்து ஐந்திணை வாழ்வுக்கு மீள்வார்கள், ! வாழ்வெனப் படுவது ஐந்திணையே ஆதலின் - 身、1Sー 。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/226&oldid=1400294" இலிருந்து மீள்விக்கப்பட்டது