பக்கம்:தமிழ்க் காதல்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

தமிழ்க் காதல்


ஐந்திணை மாந்தர்கள் பலரல்லர், மிகச் சிலரே. அச் சிலராவாரும் குடும்ப உறுப்பினரே. தன்னைமறக்கும் இன்பத்திற்கோ, தன்னை ஆழ்த்தும் துன்பத்திற்கோ ஐந்தினை இடங் கொடுப்பதில்லை.

அகத்திணைக் களவு ஒராற்றால் அச்ச அவல ஆர்வவுணர்ச்சிகள் மிக்க நெறி எனினும், காதலனைத் தேர்வதில் மகளுக்கும் பெற்றோர்க்கும் நிகழும் வழிவழிப் போராட்டத்தைத் தானே ஆண்டு காண்கின்றோம். களவும் புரட்சி நெறியன்று, தொன்றுதொட்டு வரும் பாடல்சான்ற மரபு நெறியே என்று அறிக. மகளின் களவுக்கற்புக்கு முடிவில் விட்டுக்கொடுப்பார்கள் பெற்றோர்கள். ஏன்? மகளின் நல்வாழ்வையும் கற்புமேன்மையையும் முடிவில் அவர்கள் விரும்பாதவர்களா? தெத்திமோன் மூரன். ஒத்தல்லோவைக் காதலித்தாள். அக் காதலுறவினை அவள் தந்தை பிரபான்சியோ எதிர்த்துக் கோமகன் முன் முறையிட்டான். காதலர்களும் எதிருரையாடினார். "தந்தை பிறப்பளித்தான், படிப்பளித்தான், கடமையைச் செய்தான். அவன் மகளுக்குச் செய்ய வேண்டியதைச் செய்தான். இனி என் அன்னைபோல் நான் கணவனுக்குச் செய்யவேண்டியதைச் செய்யவேண்டும்” என்று வழக்குரைத்தாள் கற்பின் செல்வி.

வருக மூரே வருக வருக;
கொள்க மகளைக் கொடுப்பக் கொள்க;
உள்ளம் பற்றிய ஒருபெரும் பொருளை
உள்ளம் விரும்பி உனக்களிக்கின்றேன்

என்று பிரபான்சியோ மகளின் கற்பின் திண்மைக்குத் தலைவணங்கி னான். “ஏறிய மடற்றிறம்” என்ற பெருந்தினைத் துறை குடும்பப் போராட்டத்தையும் கற்புக்குமுன் பெற்றோரின் தோல்வியையும் காட்டுவதாகும். பெற்றோர் இறுதிவரை போராடினார், விட்டுக் கொடுத்திலர், வருவது வரட்டும் என்று வம்பு பேசினர் என்று நிகழ்ச்சியை நீட்டித்தாலன்றோ,அளவிறந்த வேகவுணர்ச்சிகளுக்கும், இன்னா விளைவுகளுக்கும் இடனுண்டாம்?

திருமணத்திற்குப் பின்னும் வேக வெம்போக்குக்களுக்கு அகத்திண்ை இடன் அளிக்கவில்லை. தலைவன் பரத்தையை நாடி அலைகின்றான், வீட்டினை மறக்கின்றான். இவ்விழுக்கம் தலைமகளைப் பெரிதும் புண்ணுறுத்துகின்றது; உணர்த்தவும் உணராப் பிணக்கம் செய்கின்றான்."ஒருவர் பொறை இருவர் நட்பு” என்பது நல்ல தமிழியம்.தமிழ் மகள் இவ்வியக்கத்திற்குப் பெரும் எடுத்துக்காட்டுதமிழ்ச் சமுதாயம் பெண்குலத்தைப் பொறுமைக் குலமாகப் பயிற்றுகின்றது.ஆதலின் கணவன்து பரத்தமைக்காக மன்ைவி அவனை வெறுத்து ஒதுக்காள்; பிற எண்ணம் தன்னெஞ்சிற் புகவிடாள்; அவன் திருந்துமளவு நன்னயஞ் செய்வாள். . %

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/231&oldid=1400301" இலிருந்து மீள்விக்கப்பட்டது