பக்கம்:தமிழ்க் காதல்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் குறிக்கோள்

221


என்பதற்குச் சான்று வேறு வேண்டுங்கொல்? இளம்பூரணர் சமணம்: காமத்தைப் பாவம் எனவும், பெண்ணை அணங்கு எனவும் கருதும் சமயத்தவர். சமயம் தோன்றாக் காலத்து எழுந்த அகத்திணைக்குச் சமயச் சாயல் ஊட்டுகின்றார்.மதங்கள் உச்சநிலை எய்தும்போது, மக்கட்பேற்றிற்கு உரிய மெய்யின்பத்தைச் சிற்றின்பம் என இகழ்வதும், தாய்க்குரிய பாலார்களை வீட்டுத் தடையர்கள் என இகழ்வதும், வரலாறு காட்டும் படிப்பினை.

சமணப் புலவர் சீவக சிந்தாமணிக் காப்பியத்தை யாத்தது எற்றுக்கு? சீவகன் எட்டுப் பெண்களை மணந்தான்; முடிவில் அனைவரையும் துறந்தான் என்று கூறுவது எதன் பொருட்டு? பெண்ணின் சிறுமையையும் துறவின் பெருமையையும் வலியுறுத்தற் கன்றோ? இயல்பான இவ்வுலக வாழ்விற்கு இடைக்காலத்துப் பரவிய மதங்கள் முரணாக நின்றன என்பது வெளிப்படை “மனிதனுக்குத் தன்னுடம்பும் பிறர் உடம்புகளும் இழிந்தன, “அருவருக்கத்தக்கன என்று பட்டால், பாலுணர்வுக் கொள்கைகள் சிறக்குமா? சீர்படுமா? ‘காதல் உடலை நாடும். உடல் இழிவுடைய தெனின், காதலர்கள் உயர்வு உடையவர்கள் ஆகி விடுவார்களா? என்பர் ஏவலக் கெல்லீசர் உடலை மதியாத சமுதாயத்துக் காதல் மதிப்புப் பெறாது என்பதனைச் சங்கப் பின் இலக்கியங்களால் அறிகின்றோம். ஆதலின் இடைக்கால இளம்பூரணர் பண்டை அகத்திணைக்கு இயல்பான பொருள் காணாமை வியப்பில்லை.

தொன்மைத் தமிழினத்தின் உலகியல் நாட்டத்தை முன்னர்த். தெளிந்தோம். காதலே உயர்ந்த வாழ்வு என்பது அவ்வினத்தின் கோட்பாடு. காதற் புணர்ச்சியான காமக் கூட்டத்தில் இன்பத்தையும் பொருளையும் அறத்தையும் அன்பினையும் காண்கின்றார், காட்டுகின்றார் தொல்காப்பியர், காதலுறவை அன்பெனவும் அருளெனவும் போற்றிப் பாராட்டினர் தமிழ் முன்னோர். "ஐதே கம்ம மெய்நோய் நட்பே' என்பது (401) குறுந்தொகை “பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை” என்பது (256) நற்றிணை.

அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோ ராயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே (குறுந் 20)

பொருள் இருந்தாற்றான் அருள் செய்யலாம். அன்பு பெருக்கலாம் என்று தலைவன் பிரிகின்றான். தலைவியின் கருத்து என்ன? காதலியைப் பிரிதல் உரமாகாது, அருளாகாது, அன்பாகாது என்கின்றாள். இல்லறநல்வாழ்விற்குப் பெண்ணின் பொறுப்புப்

1. Havelock Ellis: Psychology of Sex. Vol. II The Valuation of Sexual love, p. 118

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/234&oldid=1400304" இலிருந்து மீள்விக்கப்பட்டது