பக்கம்:தமிழ்க் காதல்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

தமிழ்க் காதல்


பெரிது என்பதும், ஆடவன் வாழ்விற்கும் பண்பிற்கும் அவளது துணை இன்றியமையாதது என்பதும், உடல் உள்ளம் உயிர் என்ற முத்திறமும் ஒத்தியயைந்து வளர்தற்குக் காமக் காதல் சிறந்த உணவாகும், உரமாகும் என்பதும் தமிழினக் கொள்கைகளாம்.


XIII

அகத்தினை சமுதாயத்தின் பொதுவிலக்கியம்


இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் ஐந்தினையாவது இல்லது இனியது நல்லது என்று புலவரால் நாட்டப்பட்டதோர் ஒழுக்கம் எனவும், உலக வழக்கோடு இயையாது எனவும் ஒரு பெருங்கருத்தை எழுதியுள்ளார். இக்கருத்து இகலின்றி ஆராய்தற்கு உரியது. 1. புலவர்கள் கற்பித்த ஒழுக்கம். 2. உலக வழக்கில் இல்லாத ஒழுக்கம்.3 இல்லை எனினும் கற்பனையாற் படைத்ததற்குக் காரணம் இனிய ஒழுக்கம். 4. நல்ல ஒழுக்கம் என்ற நான்கு கூறுகள் இவர் கருத்தில் அடங்கியுள. இனியது நல்லது என்ற கூறுகளை நாமும் ஒத்துக் கொள்கின்றோம். ஐந்தினைக் காதல் தமிழ்ச் சமுதாயத்தில் காண்கில்லா அரிய பொருளா? மலடி பெற்ற நொண்டி முயற்கொம்பை ஏணியாகக் கொண்டு படிவைத்து ஏறிச் சென்று வானத்துக் கருந்தாமரையை வாயாற் பறித்துப் பேரனுக்குப் பிறந்த நாட் பரிசாக அளித்தான் என்பது போலும் கட்டுக் கதையா? முழுதும் புலவர்தம் கற்பனைப் படைப்பா? சங்க இலக்கியம் புராணத்திலும் பெரும் புராணமா? இல்லது என்று புலவரால் நாட்டப்பட்டது என்னும் உரையாசிரியர் கொள்கை அதிர்ச்சி தருவதாகும்.

ஐந்திணைக்கண் சமுதாயத்தில் நிகழும் பல்லாறான காதல் நிலைகளும் போக்குக்களும் இடம் பெற்றில என்பது மெய்யே. அதனால் இடம் பெற்றுள்ள காதல் நிலைகளும் போக்குக்களும் பொய் என ஆகுங்கொல்? நூல் நிலையம் என்றால் வெளியிட்ட எல்லா நூல்களும் இருக்கவேண்டும். அஃது இயலுமா? இயலுமாயினும் சிறக்குமா? அறிவுப் பெருக்கத்திற்கு இன்றிய மையாத நூல்கள் இருப்பதுவே நூல்நிலையம். அதுபோல் அன்புப் பெருக்கத்திற்கு இன்றியமையாத காதற்றிறங்கள் இருப்பது ஐந்தினை என அறிக ஐந்தினை பாடும் காதற் கூறு எது அது உலகவழக்கில் இல்லாமல் இல்லை. இடைக்காலத்துத் தோன்றி கோவையிலக்கியங்கள் அகத்துறைகளெல்லாம் ஒரு தலைவன் ஒரு தலைவிபால் முறையாக நிகழ்ந்தனபோல வரிசைப்படுத்திச் செய்யுள் தொடுத்துள்ளன. இவ்வளவும் இருபால் இப்படி நிகழுங்கொல் என்று கருதி, அகப்பொருள் நடைமுறையில் இல்லை, இஃதோர் கட்டுரை என்பர் ஒருசாரார். அகம் கூறும் காதல்களுக்கு காதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/235&oldid=1400306" இலிருந்து மீள்விக்கப்பட்டது