பக்கம்:தமிழ்க் காதல்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் குறிக்கோள்

227


இவற்றிற்கே பொருளதிகாரத்தை எழுதினார் என்று கொள்மின். இவ்விரண்டினையும் சேர்ப்பின் தொல்காப்பியர்காலத் தமிழ் பத்துவகை இலக்கிய வளம் உடையதாகும்.

XIV

ஐந்திணையும் பரத்தையொழுக்கமும்

தமிழ்நாட்டில் பரத்தைக் குலம் எப்படித் தோன்றி வளர்ந்தது என்பது பற்றியோ, ஆண் பலநிலைப் பாலுணர்ச்சியுடையவன் என்பதுபற்றியோ இங்கு ஆராய முற்பட்டிலேன். ஐந்திணைக்கண் தலைவனது பரத்தமை கூறப்படுதல் ஒழுங்கா? என்பதுவே ஈண்டு ஆராய்ச்சி. இவ்வினா பல்காலும் வினவப்படும் ஒன்றே எனினும், எல்லோரும் இசையுமாறு விடைகூறல் ஒல்லுவதன்று காண். மனித வாழ்க்கையில் பல்லாறாக நிகழும் நல்ல, தீய காமக்கூறுகளை யெல்லாம் ஐந்திணை சொல்ல முயலவில்லை எனவும், செவ்விய இனிய சில காமநிலைகளையே வடித்தெடுத்துச் சொல்லும் பண்பிலக்கியம் எனவும் முன்னர்க் கற்றோம். சமுதாயத்தில்.. நிகழுமாயினும், தகாதனவற்றை எடுத்துக் கொள்ளாது, செம்மை சான்றவற்றைத் தழுவிய ஆக்க இலக்கியம் என ஐந்திணையைக் கூறலாம். பொருள்வரம்பும் நல்லொழுங்கும் தெளிந்த அமைப்பும் பெறுமாறு அறிஞர் படைத்த ஐந்திணைக்கண், ஆகாப் பரத்தையிற் பிரிவைச் சேர்த்திருத்தல் பொருந்தாது என்பது மிக வெளிப்படை.

பல்வேறு கருத்துரைகள்

அகப்பொருள் இயல்பான காதலைக் கூறுவது விறுவிறுப்பும் எழுச்சியும் இல்லாதது; பரத்தைக் காதலை ஒரு பொருளாகச் சேர்ப்பின், கணவன் மனைவியின் ஊடற் போரை இகலும் பகலும் காட்டிக் கூரிய உணர்ச்சிச் சொற்களால் இல்லக்களத்தை எதிர்குதிராகப் பாடுவர் புலவர்; அதனால் அகவிலக்கியம் நயமும் நாட்டமும் உடையதாகும் என்ற வனப்புக்கருதிப் பரத்தைப் பகுதி ஐந்திணையில் இடம் பெற்றதா? இஃதோர் கருத்துரை. தொடர்கதை அல்லது தொடர் பொருளுக்குத்தான் விறுவிறுப்புக் குன்றாவாறு காத்துக்கொள்ள வேண்டும்; பிறவற்றை இடைமடுத்து உயிர்ப்பு உடையதாக்கல் வேண்டும். தையல் சட்டைக் கன்றித் துண்டுக்கு உண்டா? அகத்திணைதொடர் பொருளன்று ஆதலின், இலக்கிய நயத்திற்கென்று ஒழுக்கநயம் இல்லாத பரத்தை வரவு வேண்டுவதில்லை. கற்பவர்க்கு அதிர்ச்சியும் ஆரவாரமும் கிளர்ச்சியும் தோன்ற அகத்திணையைப் பதப்படுத்த வேண்டும் என்று படைத்தோர் எண்ணியிருப்பின், பாங்கன்காதல் தோழிகாதல் அயலான்காதல் காதல் மாற்றம் காதற்காதல் களவிற் குழந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/240&oldid=1400345" இலிருந்து மீள்விக்கப்பட்டது