பக்கம்:தமிழ்க் காதல்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் குறிக்கோள்

237


பிறன்மனை விரும்புதலால் வருவன பகை பாவம் அச்சம் பழி என்று அறப்பெருமகன் ஒருதலையாக எச்சரிப்பர். இன்ன அற வரம்பு பரத்தமைக்கு இல்லை. பிறன்மனை நாடுவானைக் கண்டஞ்சுதல் போலப் பரத்தமையாடுவானைக் கண்டு யாரும் அஞ்சுவதில்லை காண். பிறனில் விழைவானைச் சமுதாயமே இகழும். அவனுக்கு விருந்துசெய்ய இல்லறத்தார் அஞ்சுவர். அன்னநிலை பரத்தை நாடிக்கு இல்லை. அவனுக்குப் புகழில்லையேனும் பழியில்லை. அவன் போக்குக்கு இசைவில்லையேனும் சமுதாயத்தில் பேரெதிர்ப்பு இல்லை. இலக்கியமும் அறநூலும் சமுதாய ஆற்றுக்கு நீரும் கரையும் போல்வன. ஆதலின் தமிழ்ப் பெருமகன் அறத்துப்பாலில் பிறனில் விழையாமை அதிகாரத்தையும், பொருட்பாலில் வரைவில் மகளிர் அதிகாரத்தையும் அமைத்தார். - இலக்கியம் என்பது அறநூலுக்கு இலக்கியமன்று; சமுதாயத்துக்கு இலக்கியமாம். அது சமுதாயத்தின் பளிங்கு, மக்கள் வாழ்வின் மொழியோவியம். இலக்கியமாயினும், அறநூலாயினும், எவற்றிற்கும் சமுதாய நெஞ்சமே உரைகல், பிறன் செல்வத்தைக் களவாடிச் செலவழிப்பதற்கும், தன் செல்வத்தை மிகுதியாகச் செலவழிப்பதற்கும் வேற்றுமையில்லையா? பிறன்மனை புகுதலையும் கணிகை வேட்டலையும் அங்ங்னமாகக் கருதியது தமிழ் மன்பதை இல்லறம் துறவாத ஆடவனது பரத்தமையை ஒருவகை ஒழுங்குபோல் உடம்பட்டமைந்தது தமிழ்ச்சமுதாயம். பரத்தமை சமுதாயத்தின் தேவை என அறநூலோர்கள் நெடுநாளாகக் காரணம் காட்டுவர் என்பர் ஆவலக் கெல்லிசு. இக்காரணம் தமிழ் அறநூலார் யாரும் கூறியதில்லை. பரத்தமைய்ை முற்றக் கடிவதே தமிழறம். தமிழிலக்கியப் புலவரும் பரத்தமையை உடன்பட்டதில்லை; வேண்டும் என்பதுபோல ஒருசொற் சொல்லியதுமில்லை. தமிழ் மக்களைக் கேட்டாலும், பரத்தமை வேண்டுமெனக் கூறார். எனினும் சமுதாய நட்ைமுறையில் பரத்தை வழக்காறு வேரோடிக் கிடக்கக் காண்கின்றோம். அதற்குப் பேரெதிர்ப்பு இன்மையையும் இன்றுவரை காண்கிறோம். - அன்பு சான்ற ஐந்திணைக்கண் பரத்தமை கூறப்படலாமா? இதன் உண்மைக் காரணத்தை அறிய மேலே விளக்கிய தமிழ்ச் சமுதாய மனப்பான்மை துணைபுரியும். 1.தமிழகத்தில் பரத்தமை பரவிக்கிடந்தமை 2. அதனைச் சமுதாயம் பொறுத்துக் கொண்டிருந் தமை 3. இசை நடிகம் முதலாய கலைத்துறையில் கணிகையரின் செல்வாக்கு 4. தம்மை நாடிய ஆடவர்களைப் போற்றி மதித் தொழுகும் பரத்தையர் சிலரின் குடிநலம். 5 கணவன் தன் மனைவியை என்றும் உள்ளத்துள் உயர்வாகப் போற்றிய சார்பு. 6. அனைத்திற்கும் 1. Paychology of Sex. Vol. II: Prositution, p.282.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/250&oldid=1239087" இலிருந்து மீள்விக்கப்பட்டது