பக்கம்:தமிழ்க் காதல்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் குறிக்கோள்

241


வேறுபாடு ஒரு நிலைக் கணவனுக்கும் அகத்திணையில் காட்டப்படுவதில்லை. இருதிறத்தாரையும் ஐந்திணைத் தலைவர் களாகவே நம்முன்னோர் வகுத்துள்ளனர். இது பொருந்தாது காண்.

ஐந்திணைப் பரத்தமையும் பெருந்திணைப் பரத்தமையும்

திருவள்ளுவர் காமத்துப்பாலைப் புதுமையாகப் புரையின்றிப் பாடியுள்ளார். ஐந்தினைக் காதல் வாழ்வில் ஆடவனது பரத்தைச் செயலுக்கு இடமளிக்க்வில்லை. வரைவின் மகளிரது முயக்கம் கூடாது என்று பொருட்பாலில் நெறியுரைத்த ஆசிரியர் காமத்துப் பாலில் பரத்தையரை வரவிடுவாரா? பரத்தையரை ஒதுக்கி ஊடல் அதிகாரங்களை நுணுக்கமாக யாத்த புதுப்பெருமையுடையவர் வள்ளுவர். எனினும் பரத்தமைக் குறிப்பை அவர் ஒதுக்கவில்லை. ஆடவன் நிறையாளன் எனினும் அந்நிறைவு குறைவாகவே பெண்ணுள்ளத்திற்குப் படும் போலும். இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன் என்ற வரத்தை பெருமகன் இராமனிடங்கூடச் சீதை பெற்றாள் என்பர் கம்பர். எல்லார்தம் நெஞ்சத்தின் எடைகண்ட அறப்பேராசான் பெண்ணினத்தின் உள்ளோட்டத்தைப் புலவிநுணுக்கத்திற்குப் பயன்படுத்துவர். ஆடவன் தவற்றுக்குச் சமுதாயத்தில் வாய்ப்பு உண்டு என்பதையும் அவள் அறிவாள். தன் கணவன் தவறிலன் என்பதையும் அறிவாள். அறிந்து வைத்தும், ஊடற்காலத்துத் தவறுடையான் போலச் சுட்டிப் புலவி மிகுப்பாள்.

பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்ததின் மார்பு (குறள். 1311)

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று (குறள். 1314)

இவை ஆடவன் உண்மைப் பரத்தன் என்ற செயல்மேல் கூறியவை யல்ல. அவனைப் பரத்தனாகத் தலைவி பள்ளியிடத்து எண்ணிக் கொண்ட கற்பனைமேல் எழுந்த உரையாடல்கள்.

வள்ளுவர் புனைந்த பரத்தைக் கற்பிதம் ஐந்திணையாகும். மடலேறுவன் என்று நினைத்தலும் கூறலும் ஐந்திணையாகக் கண்டோம் அல்லவா? சங்கச் சான்றோர் பலர் தலைவனது மெய்யான பரத்தைச் செயலைப் பாடியுள்ளனர். இச்செயலை ஐந்திணைத் துறையாக இதுகாறும் எண்ணி வருகிறோம் அங்ங்னம் எண்ணுவதே அகவிலக்கணமாகவும் இருந்து வருகின்றது. நிறைகுறைந்த நாண்கடந்த இச்செயல் எவ்வாறு ஐந்திணையாகும்? ஏறிய மடற்றிறம் பெருந்திணையாகக் கண்டோம். அதுபோல ஒருநிலைக்காமம் துய்க்காது கழிக்காமம் மிக்க ஆடவனது பரத்தைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/254&oldid=1400362" இலிருந்து மீள்விக்கப்பட்டது