பக்கம்:தமிழ்க் காதல்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் பாட்டு

249



கணையோர் அஞ்சாக் கடுங்கட் காளையொடு
எல்லி முன்னுறச் செல்லுங் கொல்லோ (அகம். 321)

என வருஉம் உடன்போக்குச் செய்யுட்களில் களவுத் தலைவன்மார் வீரன்மார்களாக விளங்குகின்றனர். வீரப்பண்பினைக் காதற் பெண்டிர்கள் சிறந்து மதித்தமையே அதற்குக் காரணம். வீரத்தாற் காதலும் காதலால் வீரமும் இணைந்து வளர்ந்தன. நோயுற்ற வீட்டில் இறவாது விழுப்புண்பட்டுப் போர்க்களத்து மடிதலைப் பண்டைத் தமிழினம் மிகமிக விழைந்தது என்பது நாடறிந்த வழக்கு. அதனாற்றான் அகத்திணை கண்ட தமிழ் புறத்தினையும் காண முடிந்தது, காண வேண்டியாதயிற்று. -

வெட்சி தானே குறிஞ்சியது புறனே (தொல். 1001)
வஞ்சி தானே முல்லையது புறனே (தொல், 1006)
உழிஞை தானே மருதத்துப் புறனே (தொல், 1008)

என்றவாறு இன்ன அகத்திற்கு இன்ன புறம் என விதிக்கும் மரபு ஒரு குழுவின் செயலாகுமன்றித் தனியறிஞன் செயலாதல் இல்லை. மென் காதல் ஒழுக்கத்தை அகத்தின் பொருளாகவும் வன்மறச் செயலை ப் புறத்தின் பொருளாகவும் கண்டனர் இக்குழுவினர்.

புறத்திணைப் பொருளும் அதன் இலக்கணமும் துண்ணிய வரம்புக்கு உட்பட்டவையல்ல; உட்படுபவையுமல்ல. கடலுக்கு வரம்பு உண்டோ? புறத்திணையும் அன்ன பரப்புடையது. ஆதலின் புறம்பற்றிச் சங்கத்தார்க்கு மிக்க சிந்தனையில்லை. காதலும் வீரமும் மக்கட் பொதுப்பொருளாயினும், காதலை ஞாலத்திணையாகவும், வீரத்தைத் தமிழ் நிலத்திணையாகவும் சங்கத்தார் வடித்த வடியை நாம் உணர வேண்டும். புறத்திணை ஒராற்றால் வரலாற்றிலக்கியமாம். தொல்காப்பியப் புறத்திணையாலும் சங்கப் புறப்பாட்டுக்களாலும் பண்டிருந்த போர்முறைகளையும் போர்க்கருவிகளையும் அறியலாம். அவ்வெல்லாம் பின்னர் வழக்கு வீழ்ந்தன என்பது வெளிப்படை வழக்கு வீழ்வது வரலாறாகும்; காதலையும் வழக்கு வீழும் இலக்கியமாகக் காணலாம்; காணவியலாது என்பதில்லை. ஆனால் தமிழ் மூதறிஞர்கள் அங்ங்னம் காட்ட விரும்பவில்லை.

தமிழினம் ஓரினமாயினும் அரசுவகையால் சேர சோழ, பாண்டியன் என மூவினம் போலத் தொன்று தொட்டுப் பிரிந்து கிடப்பது. அதனால் அரசுப்பூசல்கள் நாளியல்பாயின; அரசுப் போர்கள் வீட்டுக்கலாம்போல் அடிக்கடி முழங்கின.‘களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே' (புறம் 132) தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே (புறம். 86) என்ற படி போர்வினை நாள்வினை யாயிற்று.

இருபெரு வேந்தர் தாமும் சுற்றமும்
ஒருவரும் ஒழியாத் தொகைநிலை (தொல். 1017)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/262&oldid=1400372" இலிருந்து மீள்விக்கப்பட்டது