பக்கம்:தமிழ்க் காதல்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

தமிழ்க் காதல்



ஒரு காதல் நெஞ்சத்தைப் பார்த்தளவில் அமையாது, ஒவ்வொரு காதல் நெஞ்சத்தையும் அலசிக் காணும்படி தூண்டுவது அகத்திணை ஆதலின், அகவிலக்கியத்தைப் பொருட்டொடர் என்னாது நெஞ்சத் தொடரிலக்கியம் என்று அழைக்கலாம். அக மாந்தர்களுக்குப் பெயர் கொடுப்போமாயின், கற்பவர்களுக்கு வரலாற்றுணர்ச்சியே தோன்றும். ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காணும் அறிவோட்டமே எழும். செழியன் காதலோடு செங்குட்டுவன் காதலையும், பேகன் பரத்தமையோடு கோவலன் பரத்தமையையும், பேகனது கண்ணகியின் அழுகையோடு கோவலனது கண்ணகியின் அடக்கத்தையும் இணைத்து ஆராயும் நூலணர்வே பிறக்கும். பெயரடுத்து வருமாயின் பிற இலக்கியங்களுள் ஒன்றாகவே அகவிலக்கியம் எண்ணப்படுங் காண். பெயரின்மையின், காதல் மனங்களைத்தான். அகத்தினை நமக்குக் காட்டுகின்றது, பல்வேறு வாழ்வு நிலையுடைய மக்கள் குறிப்பிட்ட ஒரு காதல் நிலையில் எவ்வாறெல்லாம் நினைப்பர், சொல்லுவர், செய்வர் என்ற உணர்வுத் திறங்களைத்தான் அகத்திணை வாயிலாக அறிகின்றோம்.

இரண்டாவது உண்மை

இரண்டாவது உண்மை அகத்திணையின் குறிக்கோள். அகப்பாட்டில் முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றும் வரும். வருங்காலை முதல் கரு என்ற இரண்டில், மக்களின் இயற்பெயர் களும் வரலாறுகளும் வரலாம். உவமைப் பகுதிகளில் அவை வரலாம். யாண்டு வரலாகா தெனின், உரிப்பொருள் கூறுமிடத்து, அகத்திணை மாந்தர்களுக்குப் பெயர்களும் வரலாற்றுச் சுவடும் வரலாகாது. ஏன்? அகம் என்பது உரிப்பொருளே. ஒரு சிலர் வாழ்க்கையில் மெய்யாக நிகழ்ந்த காதற்பான்மைகளைப் புலவன் கண்டிருப்பான்; கேட்டிருப்பான், அக்காட்சியும் கேள்வியும் சில பாடல்களை இயற்றத் தூண்டியிருக்கும். என்றாலும் அகப்புலவன் அக்காதலைத் தூய முதல்நிலையில் வைத்துப் பாடுவான்; பெயர் அடுத்த' அந்நிகழ்ச்சியை, அணியை உருக்கிப் பொன்னாக்குதல்போல், பொது நிலைக்கு உயர்த்துவான்.

பாத்திரங்களோடு ஒன்றி விடுகை நாடகப் புலவன் வழக்கு தன் சுவடு தோன்றாது தன்னை ஒளித்து அழித்துக் கொள்கின்றான் அவன். “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல்சான்ற புலனெறி வழக்கம்” (தொல், 668) என்றபடி, அகத்திணை நாடகப் பண்புடையதாதலின், புலவன் தன்னிலை தோன்றப் பாடான். கூற்றோடு வேற்றுமையின்றிக் கலந்து விடுவான். தானொரு கூற்றாகத் தனிநின்று பாடும் பெற்றி அகப்புலவனுக்கு என்னானும் இல்லை. ஒன்றிவிடும் பான்மையில் அகப்புலவன் நாடகப் புலவனோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/267&oldid=1400378" இலிருந்து மீள்விக்கப்பட்டது