பக்கம்:தமிழ்க் காதல்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் பாட்டு

255


ஒப்பான் ஆயினும், அகவிலக்கியத்திற்கும் நாடக விலக்கியத்திற்கும் அடிப்படையமைப்பில் பெருவேற்றுமை யுண்டு. நாடகத்தில் வரும் ஆட்கள் மெய்யானர்வர்களாகவோ கற்பனையானவர்களாகவோ இருக்கலாம்; எனினும் அன்னவர்களுக்கு மக்கட்பெயர்கள் உண்டு. மனோன்மணி, வாணி, புருடோத்தமன், நடராசன், நாராயணன், சீவகன், குடிலன் முதலான பெயர்கள் மனோன்மணிய நாடக மாந்தர்க்கு வருவன. சாருதத்தன், சருவிலகன், வசந்தசேனை, மதனிகை என்றின்ன பெயர்கள் மண்ணியல் சிறுதேர் நாடகத்தில் வருவன. ஆர்லந்து ரோசலிந்து ரோமியை சூலியத்து ஒத்தெல்லன் தெத்திமோன் என்பன செகப்பிரியர் நாடகங்களில் வரும் பெயர்கள். இன்னணம் நாடக மாந்தர்கள் இயற்பெயர் தாங்கி வருவர். எந்நிகழ்ச்சியும் உரையாடலும் யார் பெயரோடும் ஒட்டியயே வரும். இது நாடகநூலின் இயல்பு. பிறவிலக்கியங்களின் இயல்பும் இதுவே.

அகத்திணை முற்றும் கூற்று வகையான் அமைந்த நாடகப் பாங்கினதாயினும், அக் கூற்றுக்கள் மக்கள் பெயர் பெறா. தலைவன் தலைவி தோழி செவிலி நற்றாய் எனக் கூற்றுப் பெயர்கள் பெறும். கூற்றுப் பெயரனைய பொதுப் பெயர்களையும் பெறும். அஃதன்றி எவ்வகையான மெய்ப்பெயருக்கும் புனைபெயருக்கும் இடமில்லை. யாரொருவர் சிறப்புப் பெயரும் வரலாகாது.கிழவோன்மேன, கிழவோள் செப்பல், தோழிக்கும் உரிய, செவிலிமேன, காமக் கிழத்தியர் மேன எனவாங்குத் தொல்காப்பியம் உறவுக் குறியீடு செய்தல் காண்க. மேலும் அகத்திணை குடும்ப விலக்கியம். அத்திணையின் சிறந்த மாந்தரெல்லாம் தாய் தந்தை கணவன் மனைவியென நெருங்கிய உறவினர்கள், உறவன்ையவர்கள், கிளைஞர்கள் தம்முடன் பேசிக்கொள்ளும்போது கிளை சுட்டிப் பேசுவதல்லது, பெயர் சுட்டிப் பேசார். அதுவும் காதற்றுறையில் பெயர்சுட்டிப் பேசுவரோ? இம் மரபையும் ஈண்டு நினைவு கொள்க.

IV

பாற்கல்வி

இயற் பெயர் வாராது, வரக்கூடாதென்று ஓர் இலக்கியம் கண்டதன் குறிக்கோள் என்ன? அகப் பொருளில் வரலாற்றுள்ளம் தோன்றலாகாது என்று வடித்ததன் உட்கிடையாது? காமப் பருவம் வந்த இளைஞர் இளைஞரியர்க்கெல்லாம் பாற்கல்வியைக் கசடற அளிப்பதுவே அகத்திணையின் தலைக்கோள். இக் கல்வியைக் கற்பித்தற்கு இலக்கிய முறைதான் நல்வாயில் என்பர் பாலியல் அறிஞர் ஆவலக் கெல்லிசு. ‘பால் பற்றிய அறிவுப் பனுவல்களைக் காட்டிலும் இலக்கியங்கள் ஆற்றல் வாய்ந்தன; ஒருபுடைக் காதல் இருபாற் காதல் எண்ணங்களும் எழுச்சிகளும் இலக்கியத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/268&oldid=1400379" இலிருந்து மீள்விக்கப்பட்டது