பக்கம்:தமிழ்க் காதல்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

தமிழ்க் காதல்


பேரிடங்கொள்கின்றன; கற்பனை சான்ற இலக்கியம் பாலடிப் படையிலிருந்து அழகும் ஆராவின்பமும் தழைத்துச் செழிப்பதைக் காட்டுகின்றது; உண்மைக் காதலாடுவதற்கு முன்னே அதன் உயரிய வடிவத்தை இளையவர்கள் இலக்கியச் சோலையில் கண்டு பயில்வ. ஆதலின் பருவஞ்சால் உள்ளங்கட்கு இலக்கியம் பாற்கல்வி நூலாகும் என்பது அப்பேரறிஞன் கருத்து. இவர் கூறுவது இலக்கியத்திற்கு உரிய பொதுக் கருத்து. பொதுவாகவே தமிழ் மொழியுட்பட எம் மொழியின் பேரிலக்கியங்களிலும், இயல்பின் விஞ்சிய காதல்களும் கொடுங் காதல்களும் தெய்வக் காதல்களும் பேரிடங் கொண்டிருப்பதைக் கற்கின்றோம். கவிதைச் சுவையை மிகுப்பது என்பது ஓரிலக்கிய நோக்கம். அந் நோக்கத்திற்குக் கவிஞன் எப்பொருளையும் நன்று தீது பாராது மேலிட்டுக் கொள்கின்றான். கற்பவர்க்குக் கவிச் சுவை யளிப்பது இலக்கிய பயன். இது பரவி நிற்கும் பெருங் கருத்து.

அகத்திணை எல்லா இலக்கியத்தினின்றும் வேறுபட்ட நோக்குடையது. கற்றபின் நிற்க என்பது அதன் நோக்கம். ஆதலின் பாலியல்புகளை கசடறக் கற்பிக்க முயல்வது அதன் அமைப்பு. பாடும் புலவனுக்கு அவன் எண்ணிய காதலையெல்லாம் பாடலாம் என்ற பொருளுரிமையோ, எண்ணியபடி யெல்லாம் பாடலாம் என்ற முறையுரிமையோ இல்லைகாண். ஆன்ற முன்னோர் வகுத்த உரிப்பொருளுக்கும் முறைமைக்கும் அடங்கிப் பாடுபவனே அகப்புலவன். கவிநயத்திற் கென்று ஒன்றினை அகத்திணையிற் கூடச்சேர்த்த வரல்லர் அதன் படைப்பாளர் மாசற்ற பாற்கல்விக்கு இயையாதவற்றை, வழக்கிலிருந்தாலும் வரவொட்டாது ஒதுக்கினர்; இயைதல் நன்றெனத் தோன்றியவற்றைப் படைத்தேனும் சேர்த்தனர். பிறவிலக்கியங்கள் சென்ற தடத்திற் செல்லாது, இயல்பினும் இயல்பான காதலுணர்வுகளைப் புனைவது அகவிலக்கியம்.

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே (தொல். 959)

என்பது இலக்கண மாதலின், அகத்திணைக்குப் பாடு பொருளான புணர்தல் பிரிதல் முதலிய ஐந்தும், எளிய இனிய மேதக்க இயல்புக் காதல்கள் அல்லவா? இக் காதலுணர்ச்சிகளை நூறு பல்வகையில் ஆண்பெண் மனநிலைகளுக்கேற்பப் புனைந்து காட்டுவது அகத்திணை. அப்பல்புனைவில் ஒவ்வொருவனும் ஒவ்வொருத்தியும் தன்னுள்ளக் காதல் வடிவத்தைக் காண்பர். ஒருவர் மற்றவர்தம் காம வேட்கையை மதித்து ஒழுகவேண்டும் என்று செயலுறுத்துவது அகத்திணை. உடற்காம வேட்கையில் உள்ளமும் மாசறக் கலத்தல்

1. Studies in the Psychology of Sex. Vol. II. Sexual Education, pp.86,90.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/269&oldid=1400380" இலிருந்து மீள்விக்கப்பட்டது