பக்கம்:தமிழ்க் காதல்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

தமிழ்க் காதல்


அகப் பாட்டிற்கு அவர்தம் இல்லறத்து நிகழ்ந்த ஒரு பெரும் துன்பச் செயல் காரணம் என்று அறிகிறோம். இவ்வுறிவுக்குப் பின் “யாண்டும் காணேன் மாண்தக்கோனை” என்ற அடியைப் படிக்கும்போது, பெயருணர்ச்சி தோன்றி விடுகின்றது நமக்கு. ஆட்டன் அத்தியைத்தான் மாண்தக்கோன் என்று மறைத்துக் கூறுவர் என்ற எண்ணப்படுகின்றது. புலவாட்டி ஆதிமந்திக்கும் இக் குறுந்தொகைப் பாட்டுக்கும் வாழ்க்கைத் தொடர்பு உண்டு என்று இனிச் சொல்லாதிருக்க முடியுமா? ஆதிமந்தியின் அகப்பாட்டை ஒராற்றான் புறப்பாட்டாகும்படி செய்த குற்றமுடையவர் பரணர் என்று சொல்லாதிருக்க முடியுமா? இவ்வகைக் குற்றப்பாடு ஒளவையாருக்கும் உண்டு. -

நெறிபடு கவலை நிரம்பா நீளிடை
வெள்ளி வீதியைப் போல நன்றும் .

செலவயர்ந் திசினால் யானே - (அகம். 147)

என்ற அகப்பாட்டில், காமுற்ற வெள்ளிவீதியாரின் கழிபெருஞ் செலவைக் காட்டிக் கொடுத்தனர் ஒளவையார். அதனால் “எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது” என்னும் வெள்ளி வீதியின் அகப்பாடலுக்கும், அவர்தம் இல்லற வாழ்வுக்கும் தொடர்பு உண்டு என்று கற்கின்றோம். எனக்கும்’ என்ற சொல்லுக்கும் வெள்ளி வீதி என்ற பெயர்க் குறிப்புக் கொள்ளத் தோன்றுகின்றது. பரணர் ஒளவையாருங்கூட குற்றம் குறைந்தவர்கள் வெள்ளி வீதியாரை நோக்கும்போது. வீதியார் கணவனைத் தேடிக் காதற் செலவு மேற்கொண்டவர்; எனினும் தன் செயல் தோன்றாவாறு, தோன்றக் கூடாதென்று பாட்டுக்களை அகத்திணையாகப் பாடினார். அங்ங்னம் பாடியவர், -

காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து
ஆதி மந்தி போலப் பேதுற்று

அலந்தனென் உழல்வென் கொல்லோ (அகம். 45)

என்று ஆதிமந்தியின் நாண் கடந்த செயலை உவமைப்படுத்துவது தகுமா? வெள்ளிவீதியின் காதற் புறப்பாட்டைப் பற்றி ஒளவையாரும், ஆதிமந்தியின் அலைவைப் பற்றிப் பரணரும் வெள்ளிவீதியாரும் குறிப்பிடாதிருந்தால், நாம் என்ன அறிவோம்? மற்றைச் சங்கச் சான்றோர் அகப் பாடல்களைப் போல ஆதிமந்தி வெள்ளி வீதியார் தம் பாடல்களையும் தூய அக நோக்கோடு கற்போம். இக்குறிப்பறிந்த பின் அந்நோக்கோடு கற்பது எளிதன்று: கற்பிப்பதும் எளிதன்று. அதனால் அகப்பாடும் புலவர்கள் ஒன்று அறிய வேண்டும். உரிப்பொருளுக்கு உரிய முதல் கருச் சூழ்நிலைகளில் யாதும், எவ்வரலாறும் கூறலாம் என்று எண்ணிப் பாடற்க, போர் கொடை கல்வி முதலான வரலாற்றுப் பகுதிகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/279&oldid=1394537" இலிருந்து மீள்விக்கப்பட்டது