பக்கம்:தமிழ்க் காதல்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

தமிழ்க் காதல்


பரத்தையை நீ வீட்டிற்குக் கொண்டு வந்து வைத்து இன்புற்றாலும் என்பதனால், தலைவனது பரத்தமையையும் தன் பொறுமையையும் புலப்படுத்துவாள் தலைவி. கற்பு என்னும் சொல்லுக்குக் கல்வி என்ற பொருளுண்டு. ஈண்டு குடும்பக்கல்வியைக் குறிக்கும்."வெளிறில் கற்பின் கண்டமர்” (அகம்.106) என்று இவ்வாசிரியரே இச்சொல்லை மற்றொரு செய்யுளில் ஆள்வர். படைக் கல்வி என்பது அதன் பொருள்.

தலைவியை மகப்பெறுங் கொள்கை யுடையவளாகக் காட்டிய வங்கனார், அதற்கேற்பவே மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே’ (குறுந் 8), மறுவரும் சிறுவன் தாயே (குறுந் 45) என்று தாய்மை சுட்டிப் பாடுவர். பெண்ணினத்தை நன்றாக நிகராக மதிப்பவர் ஆசிரியர் என்பது பெண்குழந்தைகளோடு ஆண் குழந்தைகளையும் பெறுதல் என்று கூறும் கருத்தால் அறிக. “கிரேக்கப் பெண் தாயாகிவிட்டால் தன் வாழ்வின் நோக்கம், நிறைவேறியதாக மகிழ்வாள். குடும்ப ஆட்சியும், குழந்தைகளைப் பெற்று வளர்த்து மனப்பருவம் வரை காத்தலும்அவளின் இரு கடன்களாம். கிரேக்க சமுதாயத்துக்கு மண்ம் என்பது மெய்யான வழியினரைப் பெருக்கும் வாயில்[1] ஒழுங்கும் நம்பிக்கையும் பொருந்திய குடும்பக் காவல் மனைவியாவாள் இல்லத்தரசி” என்று ஆசிரியர் ஆன்லிச்சு கிரேக்க நாட்டில் இல்லக்கிழத்தியின் கடமைகளை விளக்குவர்.[2] கிரேக்க சமுதாயத்தும் தமிழ்ச் சமுதாயத்தும் இற்பெண்டிரின் கடமைகள் ஒன்றாதல் காண்க -

5. ஆலம்பேரி சாத்தனார்

சாத்தனார் பாடிய அகப்பாடல் எட்டனுள் நான்கு களவின; நான்கு கற்பின. தலைவன் தலைவியின் வருத்தவுணர்ச்சிகளை ஏற்ற முதல் கருச் சூழ்நிலையில் வைத்துப் புலப்படுத்தியுள்ளார் சாத்தனார். இளவேனில் வாடை மாலை முதலிய காலங்கள் காமத்தைக் கிளறும் என்று கற்புத் திணையிற் பாடுவது பெருவழக்கு மாலையும் இரவும் வாடையும் தலைமக்களுக்கு ஆற்றாமையைத் தந்தன என்று களவிற் பாடுவர் இவ்வாசிரியர். பறவைகளின் ஒலிகள் இவர் பாடலில் பேரிடம் பெறுவன. புணர்ந்தவற்றின் ஒசைகளையும் பிரிந்தவற்றின் ஒசைகளையும் கேட்கின்றோம். மனையிடத்துப் பெண் துணையை அழைக்கும் ஆண்புறாவின் காதற் பயிரையும், மனைமடலில் ஏறிப் பெடையைப் புணரக் கூவும் ஆண் குருகின் வேட்கை யொலியையும், ஒர்த்துக் கேட்டுக் காமம் பெருகுகின்றாள் தலைவி. கூடியின்புறும் அன்றிற் பறவைகளின் மகிழ்குரல்கள் பிரிந்திருக்கும் தலைவியையும்,


  1. ஒநோ"கடும்புடைக் கடுஞ்சூல் நங்குடிக்கு உதவி"நற்.17
  2. Sexual life in Ancient Greece, p. 18.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/297&oldid=1394735" இலிருந்து மீள்விக்கப்பட்டது