பக்கம்:தமிழ்க் காதல்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

293



வினைமுற்றியபின் கார் காலத்துத் தலைவன் வீடு திரும்புகின்றான். அவன் வரவறிந்த பாக்கத்தவர் இனி இப்பெண் விருந்துபெற்றாள், ! விருந்தோம்புவாள்' என்று மகிழ்ந்து கூறுகின்றனர்.

தமிழர் கண்ட இல்லறக் கடமையாவது விருந்தோம்பல். நடுயா மத்து விருந்து வந்தாலும் உவந்து உணவு படைப்பாள் ("அல்லிலாயினும் விருந்து வரின் உவக்கும்” நற். 142) என்று மனைவியின் கடமைப்பற்றை இடைக்காடனாரின் தலைவி தனித்தி ருக்கும்போது, அவ்வில்லத்திற்கு நண்பர்களும் புதியவர்களும் வந்து தங்குவது வழக்கம் இல்லை. தலைவனது பிரிவு விருந்தினர்தம் வருகையை அரிதாக்கும். கோவலனது மாதவிப் பிரிவால் “விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை” என்று இல்லாள் கண்ணகி எடுத்துரைத்தல் காண்க. விருந்து வருதல் என்ற தமிழ்த் தொடரால் கணவன் உட்னுறைகின்றான், இல்லறக் கடன் ஆற்றுகின்றார்கள் என்ற உட்கருத்தும் பெறப்படும். ஆதலின், "விருந்தும் பெறுகுநள்", ‘விருந்தேர் பெற்றனள்” எனத் தலைவன் வரவு கண்ட அக்கம் பக்கத்தோர் மொழிவராயினர். தலைவி பெறும் விருந்தினன் யாவன்? தலைவனது வண்டியை ஒட்டிக்கொண்டு வந்த பாகன்.

வரைமருள் மார்பின் அளிப்பனன் முயங்கி
மனைக்கொண்டு புக்கனன் நெடுந்தகை

விருந்தேர் பெற்றனள் திருந்திழை யோளே (அகம் 384)

பாகன் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான் தலைவன் தன் தோளால் அவனை அனைத்துக்கொண்டு வீட்டிற்குள் புகுந்தான், தலைவி நல்லதொரு விருந்து பெற்றாள் என்பர் மாசாத்தியார்.தமிழ்ச் சமுதாயத்தில் வண்டி முதல்வனுக்கும் வண்டியோட்டிக்கும் நிலவிய நிகர் மதிப்பை இதனால் அறியலாம். - . - மாசாத்தியார் யாத்த பாடல்கள் சிவவே யாயினும், அவர்தம் கற்பனையாற்றலைக் காட்டப்போதியவை. தலைவன் வரவில்லை, அவன் குறித்த கார்காலம் வந்தெய்தியது. முல்லை முகைகள் பொலிந்திலங்கின. குளிர்ந்த பருவமும் பூவின் மணமும் தலைவிக்கு உவகையை அளிக்கவில்லை. “நின் தலைவன் நின் இளமையை மதித்திலன்; பொருளை மதித்துச் சென்றான்; இன்னும் வந்திலன்; அவன் வருவது என்றோ? ஏன் எதிர்பார்த்து ஏங்குகின்றாய்?” இவ்வாறு கார் என்னும் பருவப்பெண் முல்லைப் பற்களைக் காட்டிக் கேலிசெய்வது போலத் தலைவிக்கு நெஞ்சு உறுத்துகின்றது. (குறுந் 124) - -

மெல்லியல் அரிவை இல்வயின் திறீஇ
இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே
வான்வழங்கு இயற்கை வளியூட் னயோ

மானுரு வாகநின் மனம்பூட்டினையோ (அகம். 384)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/306&oldid=1394746" இலிருந்து மீள்விக்கப்பட்டது