பக்கம்:தமிழ்க் காதல்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

295



இடைச்சுர மருங்கின் அவன்தமர் எய்திக்
கடைக் கொண்டு பெயர்த்தலிற் கலங்களுர் எய்திக்

கற்பொடு புணர்ந்த கெளவை (தொல், 986)

என்றலின், உடன்போக்கில் உள்ளத்துயர் உண்டு என்பது தெளிவு. இக் களவுப் பாலையையும் கற்புப்பாலையையும் அறமும் திறமும் பொருந்தப் பாடிய ஒதலாந்தையார் சிறந்த பாலைப்புலவர் ஆவர். இவர்தம் ஐங்குறுநூற்றைக் கற்ற மாந்தர்க்கு அகத்திணையின் இலக்கிய வளத்தில் ஐயந்தோன்றாது. மரபுநிலை திரியாமல் அகத்துறைகளைப் படைக்கலாம். பாடலாம் என்ற புத்தாற்றல் தோன்றும். அகத்துறைப் புதுமைக்குச் சில எடுத்துக்காட்டுக்கள்

துறைப் புதுமைகள்

1. உடன் போன தலைமகள் மீண்டு வந்தவுடன், நின் ஐயன்மார் பின்பற்றி வந்தபோது இடைச்சுரத்து நிகழ்ந்தது என்ன? என்று தோழி கேட்டாள். நிகழ்ந்தது கூறித் தலைமகன் மறைந்து கொள்ளுதற்கு உதவி செய்த மலையை தலைவி வாழ்த்துவது (ஐங். 321).

2. புணர்ந்துடன் போகும் தலைமகன் இடைச் சுரத்தின் கண் தலைமகள் விளையாட்டாகப் பூத்தொடுப்பதைக் கண்டு புகழ்கின்றான். அதற்கு அவள் நாணிக் கண்புதைத்த போது மகிழ்ந்து கூறுவது (ஐங் 319).

3. உடன்போகிய தலைமகள் தலைமகன் வளைத்த கொம்பிற் பூக்கொண்டு தனக்கும் பாவைக்கும் வகுப்பதைப் பார்த்தவர்கள் கூறுதல் (ஐங். 383)

4. இடைச்சுரத்தின்கண் தலைமகன் தலைவியினுடைய குணங்களை நினைக்கின்றான். அவனை நினைப்பதனால் சுரத்தின் வெப்பம் நீங்கியது கண்டு சொல்லுதல் (ஐங், 322)

5. உடன்போகிய தலைமகள் ஆண்டு எதிர்வரும் அந்தணர்க்குச் சொல்லியது (ஐங். 384).

உடன்போகியாளின் தாய்படும் அவலப் பாங்கினையும் காட்டும் அன்பினையும் தெளிந்த அறிவினையும் ஒரு முப்பது பாடல்களில் (ஐங். 371-400) ஏற்றம்பட வடிக்கின்றார் ஒதலாந்தையார். இம் முப்பது செய்யுட்களையும் ஒரே முறையில் இருந்து படிப்பின், உள் ளோட்டங்கள் ஊடுறு கதிர்ப்படம்போல் தோன்றக் காண்பீர். மகளின் உடன் போக்கைத் தாய் ஒப்புகின்றாள். அறநெறி இதுவெனத் தெளிந்த என் மகள் என்று போற்றுகின்றாள். மகளின் செலவுக்கு அவள் வருந்தவில்லை; உண்மையைச் சொல்லும் துணிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/308&oldid=1394748" இலிருந்து மீள்விக்கப்பட்டது