பக்கம்:தமிழ்க் காதல்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

299


எல்லை முட்டியபின், இனித் திருந்துவதே வாழ்வு என்று எண்னும் நன் மக்களைக் காண்கின்றோம். நாளாயினும் வாழ்வுச் செம்மையைப் போற்றி வரவேற்கின்றோம். இவ்வுள'நிலையை அறிந்தவர் புலவர் ஒரம்போகியார். பரத்தமை எல்லைகண்டு துய்த்த தலைமகன் அதனைக் கைவிட முயல்கின்றான். -

தண்டுறை யூரன் தெளிப்பவும் உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய் (ஐங். 21)

என்றபடி, தெய்வத்தின் மேல் ஆணை செய்கின்றான். இதுதகாது என்று முற்றும் பரத்தமை கடிந்த ஒரு தலைவனது நல்வரவை ஒரைந்து செய்யுட்களில் (1.5) கற்கின்றோம். நெடுங்காலம் பரத்தைத் துறைபோய அவன் அதனை முற்றக் கடந்து வீடு வந்து மனைவி. யோடு இன்புறுகின்றான். யான் அவ்வாறு ஒழுகித் திரிந்த காலத்து, நீங்கள் என்ன நினைத்தீர்கள் என்று வினவுகின்றான் தோழியை. பரத்தமை பாடும் ஒரம்போகியார் திருந்திய தலைவனை முதல் ஐந்து பாக்களிற் சொல்லி நூலைத் தொடங்குதலின், எந்நிலையரும் நன்னிலைக்கு வரலாம்,வரவேண்டும் என்பது அவர் கருத்தாதல் பெறப்படும்.

வாழி ஆதன் வாழி அவினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க

எனவேட் டோளே யாயே

தலைவன் நிலை திரிதற்காகத் தலைவி கடமைநிலை, எண்ணநிலை திரிதல் கூடாது என்பதும் ஒரம்போகியார் உறுதிப்பாடு. கணவன் கன்றிய பரத்தனாக ஒழுகியபோது, அவ்வருத்தத்தில் ஆழ்ந்து விடாது, “அரசு வாழ்க, நெல் மிக விளைக; செல்வம் பெரிது கொழிக்க” என்று உயர்ந்த உள்ளம் தோன்ற இல்லறம் காக்கின்றாள் தலைவி.

எதிர்ப்புத் தலைவி

தலைவனது பரத்தமை எத்தகைய பெண்டின் உள்ளத்தையும் வருத்தவே செய்யும் தலைவன் மற்றொரு பரத்தையை நாடும்போது முதற்பரத்தைகூட உள்ளம் வெதும்புகின்றாள் (ஐங், 42). கணவனது இழிவொழுக்கத்தைக் கண்டுகொண்டு எம்மனைவியும் மகிழ்ந் திராள், கற்புத் தெய்வமான கண்ணகி கோவலனது பரத்தமை யால் உள்ளம் உடைந்தாள்; மேனி மெலிந்தாள். அவளது வாடிய மேனியின் வருத்தம் கண்டு கோவலன்மனம் திருந்தினான். 'போற்றா ஒழுக்கம் புரிந்தீர்” என்று கோவலனுக்கு முன் கண்ணகி கூறுவதிலிருந்து, தலைவனது செயல் தவறு என்பதை அவள் உணராத பேதையல்லள், உணர்ந்து அடங்கிய அறிஞன் என்பது தெளிவு. ஆதலின் கணவனது பரக்காமம் காதலியின் நெஞ்சைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/312&oldid=1394754" இலிருந்து மீள்விக்கப்பட்டது