பக்கம்:தமிழ்க் காதல்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

தமிழ்க் காதல்



துளைத்தல் இயல்பினும் இயல்பே. ஒரம்போகியாரின் அகத்தினைத் தலைவியர் தலைவனது பரத்தமைக்கு உள்ளம் பொங்குமவர், சிறிதும் இசைந்து வாழ மன மில்லாதவர், எதிர்ப்புக் காட்டுபவர்.

மாநீர்ப் பொய்கை யாணர் ஊர
துயர் நறியர்நின் பெண்டிர்

பேஎய் அனையம்யாம் சேய்பயந் தனமே (ஐங். 70)

என்பது ஒரு மனைவியின் வல்லுரை. “நின் பெண்டுகளாகிய பரத்தையர் எப்போதும் குளித்த உடற்றுாய்மை உடையவர். புதுப்பூ அணிந்து நறுமணம் மிக்கவர், நாங்களோ மகப்பெற்றோம், உடல் மெலிந்தோம், என்பானோம், மக்களைத் தூயராகவும், நறியராகவும் போற்றுகின்றோம். எங்களைப் போற்றிக் கொள்ளப்பொழுது ஏது?” எனக் கசந்து கடிந்து கூறுகின்றாள் ஒரு தலைவி. சின்னஞ்சிறு குழந்தைபோல இப்படி நடந்து கொள்ளலாமா? ஊர் சிரியாதா? என்று அறிவுறுத்துகிறாள் ஒருத்தி (ஐங். 85) உன் தந்தை தாயைக் காட்டிலும் ஒழுக்கத்தில் உன்னை இடித்துரைக்கும் உரிமை இவளுக்கு உண்டு என எடுத்துக் காட்டுகின்றாள் ஒரு தோழி (98). மற்றொருத்தியைத் தோய்ந்த மார்பைத் தோயேன், எக்கேடுவரினும் வருக எனக் கொதித்து மொழிகின்றாள் ஒருத்தி (63),

பரத்தமை தாங்கலோ இலனென வறிதுநீ
புலத்தல் ஒல்லுமோ மனைகெழு மடந்தை
அதுபுலந் துறைதல் வல்லி யோரே -
செய்யோள் நீங்கச் சில்பதம் கொழித்துத்
தாமட்டு உண்டு தமிய ராகித்
தேமொழிப் புதல்வர் திரள்குமுலை சுவைப்ப
வைகுநர் ஆகுதல் அறிந்தும்

அறியார் அம்மவஃதுடலு மோரே (அகம். 361)

சங்க அகச்செய்யுட்களுள் அரியதொரு பாடல் இது. தலைமகனது புறப்போக்குத் தாங்க இயலவில்லையே என்று ஒரு தலைவி மிக வருந்துகின்றாள். எவ்வாற்றானும் அவள் மனம் இசையவில்லை. இதன் விளைவு என்னாம்? குடும்பம் வறுமைப் படும், குழந்தைகள் மெலிவெய்தும், இல்லறம் வற்றிப்போம். ஆதலின் அறிவுரைத் தோழி பிடிவாதத் தலைவியை இடித்துரைக்கின்றனள். பொறுக்க அறியாமையினால் கெட்ட குடிகளைக் காணாயோ என்று எடுத்துக் காட்டுகின்றனள். பொறுப்பதே மனைவியின் பொறுப்பு என்பது தோழியின் நல்லுரை. இல்லறப் பிணிப்பிற்குப் பொருட்பிணிப்பு ஒரு காரணம் என்பதை ஒரம்போகியார் இப்பாடலில் வைத்து அறிவுறுத்துவர். அகமரபு குன்றாமல் எல்லையளவும் சென்று கருத்துக்களைப் புனையலாம் என்பதற்கு இச்செய்யுள் சான்றாதல் ó广TGö了。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/313&oldid=1394755" இலிருந்து மீள்விக்கப்பட்டது