பக்கம்:தமிழ்க் காதல்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

தமிழ்க் காதல்



களவுத்திணையில் தாயின் நிலைபற்றித் தொல்காப்பியத்து பல நூற்பாக்கள் உள. மகள் இல்லாளாகிய கற்பியலில் நற்றாய் பேச்சு வரவுக்குப் பெரிதும் வாய்ப்பு இல்லை. எனினும் கந்தரத்தனார் கல்லாடனார் நக்கீரர் ஆகிய முப்புலவர்களும் அன்னையை அகப்படுத்திப் பாடியுள்ளனர். இம்மூவர் பாடல்களும் பாலைத்திணையன தலைமகனது பிரிவின்கண் தலைவி ஆற்றாது வருந்தும் துறையன; இவ்வொற்றுமை ஒர் வியப்புக் காண் கணவனது பிரிவால் மகள் தோள் நாளும் மெலிவதைக் கண்டு, "அன்னையும் அருந்துயர் உற்றனள்" (அகம் 209) என்று குறிப்பர் கல்லாடனார். நாளும் பசலை நோய் பரந்து உடம்பு தேய்வதைக் கண்டு, தாய்க்கு முகமலர்ச்சியில்லை ("அன்னையும் அமரா முகத்தினள்” அகம். 153) என்று சுட்டுவர் நக்கீரர். இவ்விருவர் பாட்டிலும் தலைவியின் அன்னை ஒரடியிற் சுருக்கமாக உரைபடுகின்றாள். கந்தரனத்தனார் பாடலில் அன்னையின் துயரைப் பலவடிகளில் கேட்கின்றோம்.

சுரம்பல கடந்தோர்க் கிரங்குப என்னார்
கெளவை மேவலராகி அவ்வூர்
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
புரைய வல்லவென் மகட்கெனப் பரைஇ
நம்முனர்ந் தாறிய கொள்கை

அன்னை முன்னர்யாம் என்னிதற் படலே (அகம். 95)

தலைவன் வேற்றுiந்ாடு செல்வதற்குத் தலைவி உடன்பாடு அளித்துவிட்டனள். அவன் சென்றபின்னர், அவளுக்குப் பிரிவு வருத்தம் மேலிட்டது. துதல் வெளிறிற்று. மெல்லிய மேனி நொய் தாயிற்று. இதனை அறிந்த ஊர்ப்பெண்டுகள் கணவன் போவதற்கு ஒருப்பட்டு, போனபின் வருந்துகின்றாளே என்று தூற்றலாயினர். "காதலன் பிரிவிற்கு மனைவி கவல்வது இயல்பினும் இயல்பே. அதுவும் அவன் செல்லும் வழி பாலைச் சுரம் ஆயினோ, யார்க்குத்தான் பெருங்கவலை தோன்றாது. இவ்வுறவு நிலையையும் உள்ள நிலையையும் சிறிதும் கருதிப் பாராது இவ்வூர் மடந்தையர் என் மகள்மேல் அலர் மொழிப; அது பொருந்தாது. இம் மடந்தைமார் கொடியவர், நரகத்திற்குச் செல்லத்தக்கவர்” என்று அன்னை தெய்வம் பரவுகின்றாள். தானே துயர்ப்படும் அன்னைமுன் நம் துன்பநிலையை வெளிப்படுத்தக் கூடாது என்று தோழிக்குத் தலைமகள் கூறுவது இப்பாட்டின் கருத்து. மாமன் மாமிக்குமுன் தன் துன்பத்தைக் காட்டாது அடக்கி ஒளித்துக் கொள்ளும் கண்ணகியின் மனப்பான்மையை இத் தலைவி.பால் காண்கின்றோம், தலைவி தலைவனொடு உடன் ஏகுவாள்,பின்னிருந்து இரங்குதலும், அன்னை அறிய அவலப்படுதலும்,மகளின் அவலத்தை அறிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/317&oldid=1394759" இலிருந்து மீள்விக்கப்பட்டது